இந்நிலையில் இந்தியாவின் மின்னணு சுங்கக் கட்டண வசூல் அமைப்பின் துல்லியம் மற்றும் நம்பகத்தன்மையை மேம்படுத்தும் நோக்கில், FASTag கணக்குகளுடன் இணைக்கப்பட்டுள்ள வாகனப் பதிவு எண்களை (VRNs) உடனடியாகச் சரிபார்க்குமாறு, அனைத்து FASTag வழங்கும் வங்கிகளுக்கும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) உத்தரவிட்டுள்ளது. இதில் தவறான பதிவெண்களுடன் இணைக்கப்பட்ட FASTagகளை முடக்குமாறு வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஏனெனில் FASTag ஸ்கேனர்களால் பதிவு செய்யப்படும் வாகனப் பதிவு எண், உண்மையில் சுங்கச்சாவடியை கடக்கும் வாகனங்களின் நம்பர் பிளேட்டில் (number plate) உள்ள பதிவெண்களுக்கும் பொருந்தாமல் இருப்பது குறித்துப் பல புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலை ஆணையம் தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதன்மூலம் வரிஏய்ப்பு நடந்து அரசின் வருவாய் பாதிக்கப்படும் என்று தெரியவந்துள்ளது. தவறான அல்லது செல்லாத பதிவு எண்களுடன் இணைக்கப்பட்டிருப்பதாகக் கண்டறியப்படும் எந்தவொரு FASTag-ம், அரசாங்க வழிகாட்டுதல்களின்படி ‘கருப்புப் பட்டியலில்’ (blacklisted) சேர்க்க வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
