தவெகவிற்கு 2 தொகுதி இடைத்தேர்தல் ஏன் முக்கியம்? டார்கெட் 110- முதல்வர் விஜய் கூட்டணி கணக்கு – tamil nadu cm vijay targets 110 with madurantakam dharapuram bypoll results for next 5 years

ஆட்சியை தக்க வைக்க தனிப்பெரும்பான்மை பெறும் நோக்கில் வருகின்ற இடைத்தேர்தலை தவெக பெரிதும் நம்பி கொண்டிருக்கிறது. தொடக்கத்திலேயே வெற்றி பெற்றுவிட்டால் அது தரும் நம்பிக்கை எஞ்சிய தேர்தல்கள் மற்றும் ஆட்சியை நம்பிக்கையுடன் கடக்க உதவும் என்று முதலமைச்சர் விஜய் கருதுகிறார்.

தமிழக சட்டப்பேரவையில் தனிப்பெரும்பான்மை பெறுவதற்கு மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 118 இடங்களை கைப்பற்ற வேண்டும். ஆனால் நடந்து முடிந்த 2026 சட்டப்பேரவை தேர்தலில் தவெகவிற்கு 108 இடங்கள் மட்டுமே கிடைத்தன. இருப்பினும் கட்சி தொடங்கிய இரண்டு ஆண்டுகளில் இருபெரும் திராவிட கட்சிகளை வீழ்த்தி ஆட்சி கட்டிலில் அமர்ந்த சாதனையை சாதாரண எடைபோட முடியாது. திமுக, அதிமுகவிற்கு மாற்று வேண்டும் என்று தமிழக மக்கள் விரும்புவதை புரிந்து கொள்ள முடிகிறது.

அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா – குதிரை பேர சர்ச்சை

இந்த சூழலில் குடியரசு தலைவர் ஆட்சி வந்துவிடக் கூடாது எனக் கருதி திமுக வசமிருந்த கட்சிகள், தவெகவிற்கு ஆதரவளித்தனர். அதன்பிறகு அமைச்சரவையில் இடம், வெளியில் இருந்து ஆதரவு என அதிரடியாக அரசியல் களம் நகர்ந்தது. இதற்கிடையில் இரண்டு தொகுதிகளில் வென்ற முதலமைச்சர் விஜய், திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார். அதன் தொடர்ச்சியாக அதிமுக வசமிருந்த எம்.எல்.ஏக்கள் 6 பேர் அடுத்தடுத்து தங்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணைந்தனர். இதில் குதிரை பேரம் இருப்பதாக விமர்சனங்கள் எழ, அதை தவெக தரப்பு திட்டவட்டமாக மறுத்தது.

நாளுக்கு நாள் கூடும் TVK செல்வாக்கு…குவியும் மாற்று கட்சியினர்!

அக்டோபர் 6ல் இரண்டு தொகுதி இடைத்தேர்தல்

இந்த விமர்சனத்திற்கு ஆளான 6 தொகுதிகளில் எப்போது இடைத்தேர்தல் வரும் என எதிர்பார்த்திருந்த நிலையில், வழக்குகள் முட்டுக்கட்டையாக வந்து நின்றன. அதேசமயம் வழக்குகளால் சிக்கல் இல்லாத மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 6ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதை நோக்கி தமிழக அரசியல் நகர்ந்திருக்கும் நிலையில், முதலமைச்சர் விஜய் சில கணக்குகளை போட்டிருப்பதாக தவெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. டார்கெட் 110. தற்போது தவெகவிற்கு 107 எம்.எல்.ஏக்கள் இருக்கின்றனர்.

முதல்வர் விஜய் போடும் 110 தொகுதி கணக்கு

தவெக வெற்றி கணக்கு அடுத்த மாதம் நடைபெறவுள்ள 2 தொகுதிகளில் எப்படியாவது வெற்றியை பதிவு செய்வது, அதன்பிறகு தான் போட்டியிட்ட திருச்சி கிழக்கு தொகுதியில் சரியான நபரை நிறுத்தி வெற்றியை தக்க வைப்பது என காய் நகர்த்த திட்டமிட்டுள்ளார். இதன்மூலம் மொத்த எண்ணிக்கை 110ஆக அதிகரித்துவிடும். அதிமுக Ex எம்.எல்.ஏக்கள் சர்ச்சை இதையடுத்து எஞ்சியுள்ள தொகுதிகளில் கரூர் விஜயபாஸ்கர், விராலிமலை விஜயபாஸ்கர் மீது வழக்குகள் நிலுவையில் இருப்பதால் எப்போது வேண்டுமானாலும் சிக்கல் வரலாம். அது தேர்தல் முடிவுகளை மாற்றவும் வாய்ப்புள்ளது. நீதிமன்ற வழக்குகளால் சிக்கல் பெருந்துறை ஜெயக்குமார் மீது பெரிதாக சர்ச்சைகள் இல்லை என்றாலும், அம்பாசமுத்திரம் இசக்கி சுப்பையா குழப்பத்தில் தவித்து வருகிறார். தனது ராஜினாமாவை திரும்ப பெற முயற்சித்து நீதிமன்ற கதவுகளையும் தட்டியிருக்கிறார். ஆனால் இவை எதிலும் சாதகமான முடிவுகள் வரவில்லை. தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல் இந்த பதற்றமும் கூட எதிர்க்கட்சிகளின் கைகளில் ஆயுதமாக மாறி இடைத்தேர்தல் எதிர்பார்ப்புகளை தகர்க்கக் கூடும். எனவே தான் தற்போது நடைபெறவுள்ள 2 தொகுதி இடைத்தேர்தலில் வெற்றியை உறுதி செய்வது அவசியம் என கருதுகிறார் முதலமைச்சர் விஜய்.

தவெக கூட்டணி – கரை சேர்க்குமா அடுத்த 5 ஆண்டுகள்?

சிபிஐ, சிபிஎம் கட்சிகளை பொறுத்தவரை ஆளுங்கட்சிக்கு எதிராக விமர்சனக் கருத்துகளை முன்வைத்து வருகின்றனர். இருப்பினும் அடுத்த 5 ஆண்டுகளுக்கு தங்களின் ஆதரவு தொடரும் என்று அறிவித்திருக்கின்றனர். ஆனாலும் இடதுசாரிகள் விஷயத்தில் தவெக தலைமை ஒரு நெருடல் இருப்பதை தவிர்க்க முடியவில்லை. இத்தகைய சூழலில் தவெகவின் 110, காங்கிரஸ் 5, விசிக 2, ஐயூஎம்எல் 2 என கூட்டணியாக 119 இடங்களை தக்க வைத்துக் கொண்டு 5 ஆண்டுகால ஆட்சியை சிரமமின்றி தொடர் விரும்புகின்றனர். இந்த கணக்கு உண்மையாகவும், எண்ணிக்கை மேலும் அதிகரிக்கவும் வாய்ப்பிருப்பதாகவும் அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

Source link