தவெக அமைச்சர் ஜெகதீஸ்வரியின் கார் அணிவகுப்பில் இடம்பெற்ற வாகனம் மோதியதில் காட்டாங்குளத்தூர் அருகே 26 வயது இளைஞர் உயிரிழந்தார். சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்க அமைச்சர் சென்னை வந்துகொண்டிருந்தபோது இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னைக்கு அமைச்சர் ஜெகதீஸ்வரி வந்து கொண்டிருந்தபோது, அவரது வாகன அணிவகுப்பில் இடம்பெற்றிருந்த வாகனம் மோதி 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வந்த அமைச்சர்
இன்று சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற உள்ள நிலையில், அதில் பங்கேற்பதற்காக அமைச்சர் ஜெகதீஸ்வரி சென்னைக்கு வந்து கொண்டிருந்தார். அவர் அரசு வாகனத்தில் பயணித்த நிலையில், அவருக்கு முன்னும் பின்னும் பாதுகாப்பு வாகனங்கள் சென்றதாக கூறப்படுகிறது.
காட்டாங்குளத்தூர் சந்திப்பில் நடந்த விபத்து
இந்நிலையில், காட்டாங்குளத்தூர் சந்திப்பு அருகே அமைச்சர் பயணித்த வாகன அணிவகுப்பில் வந்ததாக கூறப்படும் அவரது உறவினரின் வாகனம், சாலையில் சென்ற 26 வயது இளைஞர் மீது மோதியதாக தகவல் வெளியாகியுள்ளது.
26 வயது இளைஞர் உயிரிழப்பு
இந்த விபத்தில் படுகாயமடைந்த 26 வயது இளைஞர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
ஜனநாயகன் பட டிஷ்கஷனில் நடந்தது விஷயம்!- saravanan part 1
போலீசார் விசாரணை
விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்துக்கான காரணம், வாகனத்தின் வேகம் உள்ளிட்ட விவரங்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Source link
