தவெக தலைமையிலான கூட்டணியின் பெயர் அறிவிப்பு

சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் தவெக ஆதரவு கட்சிகளின் 2-ம் கட்ட ஆலோசனை கூட்டம் இன்று முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் தவெக தலைவர் முதலமைச்சர் விஜய் தலைமையில் உருவான புதிய கூட்டணியின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.

தவெக தலைமையிலான கூட்டணிக்கு ‘மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி’ என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் பங்கேற்றிருந்தது. வெளியில் இருந்து ஆதரவு தெரிவித்து வருவதால் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆகியவை இக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

தவெக தலைமையில் புதிய கூட்டணியை ஏற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்த நிலையில் அதற்கான முதல் ஆலோசனை கூட்டம் கடந்த ஜூன் 1-ம்தேதி சென்னை கோவளத்தில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்ற நிலையில் தற்போது 2-ம் கட்ட ஆலோசனை கூட்டம் பனையூரில் நடைபெற்றுள்ளது.

Source link