ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு, கண்ணமங்கலம் கூட்ரோடு, மாசாபேட்டை, அண்ணா நகர், பகுதியை சேர்ந்தவர் பவ்யலட்சுமி. இவர் கடந்த பத்து மாதங்களுக்கு முன்பாக கழக மாவட்ட செயலாளர் விஜய் மோகன் தனக்கு கட்சியில் பதவி வழங்குவதாக தன்னை ஆசைக்கு இறையாக்கி ஆபாச வீடியோக்கள் எடுத்து வைத்துக்கொண்டு மிரட்டுவதாகவும், மேலும் தன்னை ஆசைக்கிணங்க வற்புறுத்தி மீண்டும் மீண்டும் தொலைக் கொடுத்து, கொலை மிரட்டல் விடுத்து வருவதாக சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் தனிப்பிரிவில் புகார் அளித்துள்ளார்.
சென்னை தலைமை டிஜிபி காவல் நிலையம் மற்றும் தமிழக முதல்வரின் தனி பிரிவு அலுவலகம், போன்ற அலுவலகங்களில் பாலியல் தொடர்பான புகார் அளித்துள்ள நிலையில் அப்பெண் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆற்காடு நகர காவல் நிலையத்திலும் அந்த பெண் புகார் அளிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் ஆற்காடு நகர காவல் நிலையத்தில் ராணிப்பேட்டை தமிழக வெற்றி கழகத்தின் மேற்கு மாவட்டச் செயலாளர் விஜய் மோகன் மற்றும் அவருடன் ஜான் பிரிட்டோ ஆகிய இருவரும் மீது ஆற்காடு நகர காவல் துறையினர் நான்கு பிரிவினுக்கு வழக்கு பதிவு செய்துள்ளனர். விஜய் மோகன் தமிழக வெற்றி கழகத்தின் மாவட்டச் செயலாளர் மற்றும் இரண்டாவது நபராக வழக்கு பதிவு செய்யப்பட்டவர் ராணிப்பேட்டை மாவட்டம் நியூஸ் 7 செய்தியாளர் ஜான் பிரிட்டோ என்பது குறிப்பிடத்தக்கது.
