தாய்நாட்டை விட, ஐபிஎல் முக்கியம் எனக் கருதிய 6 இந்திய ஸ்டார் வீரர்கள்: பிசிசிஐ கடும் அதிருப்தி – six star indian team players gives priority to ipl then national team bcci unhappy

ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்குதான் இந்திய அணி முக்கிய வீரர்கள் முன்னுரிமை கொடுக்கிறார்கள். குறிப்பாக, காயத்தை மறைத்து ஐபிஎலில் விளையாடியதால், அந்த வீரர்களால் தற்போது ரெகுலராக இந்திய அணிக்காக விளையாட முடியவில்லை. அந்த வீரர்கள் குறித்து தற்போது பார்க்கலாம்.

1.வருண் சக்ரவர்த்தி: ஐபிஎல் 2026 சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடிய வருண் சக்ரவர்த்திக்கு, கால் பாதத்தில் எலும்பு முறிவு இருந்தது. லேசான எலும்பு முறிவு பிரச்சினை இருந்த நிலையில், அதனை பெரிது படுத்தாமல், வருண் சக்ரவர்த்தி தொடர்ச்சியாக ஐபிஎலில் விளையாடிய நிலையில், தற்போது அந்த காயம் பெரியதாக மாறியுள்ளது. இதனால், இந்திய அணிக்கு ரெகுலராக ஆட முடியாத நிலைலை ஏற்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டி20-யில் ஆடிய அவர், மீண்டும் காயம் காரணமாக விலகிவிட்டார்.

2.ஹர்திக் பாண்டியா: ஐபிஎல் 2026 சீசனில், மும்பை இந்தியன்ஸ் அணியை வழிநடத்திய ஹர்திக் பாண்டியாவுக்கு காயம் ஏற்பட்டது. இருப்பினும், அதனை மறைத்து, மீண்டும் சில போட்டிகளில் விளையாடினார். ஐபிஎல் முடிந்ததும், அந்த காயம் பெரியதாக மாறியது. இதனால், அதன்பிறகு ஒரு போட்டியில் கூட ஆட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

3.ஜஸ்பரீத் பும்ரா: இவரும், காயம் காரணமாக அவதிபட்டபோதும், ஐபிஎலில் ஆடினார். அந்த காயம் விரைவில் சரியாகாத காரணத்தினால், சில முக்கியமான தொடர்களில் பும்ரா ஆடவில்லை.

4.நிதிஷ் ரெட்டி: ஐபிஎலில் அனைத்து போட்டிகளிலும் ஆடும் நிதிஷ் ரெட்டியால், இந்திய அணிக்காக ரெகுலராக அனைத்து போட்டிகளிலும் ஆட முடியவில்லை. அடிக்கடி காயம் காரணமாக விலகிவிடுகிறார்.

5.ரியான் பராக்: ஐபிஎலில் விளையாடி, காயம் காரணமாக அவதிப்பட்ட ரியான் பராக், தற்போதுவரை குணமடையாமல், இந்திய அணிக்காக ஆட முடியாமல் இருக்கிறார்.

6.வாஷிங்ன்ன் சுந்தர்: டி20 உலகக் கோப்பை 2026 தொடருக்கு முன்பு, பிட்னஸ் பிரச்சினை ஏற்பட்டதால், அத்தொடரில் ஆட முடியவில்லை. இருப்பினும், அதன்பிறகு ஐபிஎல் 2026 சீசனில் தொடர்ச்சியாக விளையாடினார். பிட்னஸை கவனத்தில் கொள்ளாமல், உடனே ஐபிஎலில் ஆடியதால், அதன்பிறகு காயம் காரணமாக, ரெகுலராக விளையாட முடியாத நிலைமை ஏற்பட்டது.

பிசிசிஐ கடும் அதிருப்தி: இப்படி முக்கிய வீரர்கள், இந்திய அணிக்கு முன்னுரிமை கொடுக்காமல், ஐபிஎலில் காயத்தோடு விளையாடி, இந்திய அணிக்காக ரெகுலராக ஆட முடியாமல் இருக்கிறார்கள். இதனால்தான், இந்திய டி20 மற்றும் டெஸ்ட் அணிகள் கடும் பின்னடைவை சந்தித்திருப்பதாக, பலரும் அதிருப்தியை வெளிப்படுத்த ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில், இந்த விஷயத்தால் பிசிசிஐயும் கடும் அதிருப்தியில் இருக்கிறதாம்.

இதனால், ஐபிஎல் 2027 சீசனில் இருந்து, ஐபிஎலில் ஆடும் இந்திய வீரர்களுக்கு, பிசிசிஐ மருத்துவ குழுவினர் அடிக்கடி சோதனை நடத்தும் வகையில், விதிமுறையை மாற்றியமைக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது. மேலும், ஐபிஎல் சீசன் துவங்குவதற்கு முன், வீரர்கள் முழு பிட்னஸுடன் இருந்தால் மட்டுமே, ஐபிஎலில் ஆட, தடையில்லாத சான்றிதழ் கொடுக்கப்படும்.

அதுமட்டுமல்ல, வீரர்கள் காயம் காரணமாக அவதிப்படுவதை மறைக்கும் அணிகளுக்கு, கடும் தண்டனையையும் வழங்க பிசிசிஐ முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து, விரைவில், அனைத்து அணிகளுடன் பிசிசிஐ பேச உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Source link