திங்கட்கிழமை பதில் அளிப்பேன்; யாரும் ஓட மாட்டோம்ன்னு பிராமிஸ் செய்யுங்கள்; முதல்வர் விஜய் சவால்

சென்னை: எம்எல்ஏ.,க்கள் கேட்கும் கேள்விகளுக்கு சட்டசபையில் திங்கட்கிழமை பதில் அளிப்பேன். ஆனால் அன்று யாரும் ஓடி விட மாட்டோம் என்று பிராமிஸ் செய்ய வேண்டும் என உதயநிதி பேசி முடித்த உடன் முதல்வர் விஜய் பதில் அளித்துவிட்டு புறப்பட்டு சென்றுவிட்டார்.

சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி பேசியதாவது: எங்களுடைய ஆட்சியில் அதிக போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் குற்றச்சாட்டு வைத்துள்ளார்; கடந்த 2 வருடமாக சட்ட ஒழுங்கு பிரச்னைக்கு அரசை குறை கூறிய கட்சி இப்ப ஆட்சிக்கு வந்ததும் தனி மனித ஒழுக்கம் தான் காரணம்னு சொல்றாங்க; மக்கள் எங்களுக்கு கேள்வி கேட்கும் பொறுப்பை வழங்கி இருக்கிறார்கள்.

சரியான கேள்வியைக் கேட்டு உங்களிடம் பதில் வாங்க வேண்டிய இடத்தில் நாங்கள் இருக்கிறோம். எனவே லாஜிக்கே இல்லாத குட்டி கதைகள் சொல்லாமல் முதல்வர் நேரடியாக பதில் சொல்ல வேண்டும். ரீல்ஸ் கண்டெண்டுக்காக இல்லாமல்; ரோல் கேமரா ஆக்ஷன் இல்லாமல் டேக் டைவர்ஷன் இல்லாமல் பதில் அளிக்க வேண்டும். இவ்வாறு உதயநிதி பேசினார்.

விஜய் பதிலடி

உதயநிதி பேசி முடித்த உடன் முதல்வர் விஜய் அளித்த பதில்: எம்எல்ஏ.,க்கள் கேட்கும் எல்லா கேள்விகளுக்கு சட்டசபையில், அதற்கு தெளிவான விளக்கத்தை திங்கட்கிழமை பேசுகிறேன்; நான் இங்கே இல்லை என்றால் கூட யார் யார் என்ன கேள்வி கேட்கிறார்கள் என்பது எனக்கு வந்துவிடும்.

எல்லாவற்றுக்கும் தெளிவான பதிலை சொல்கிறேன். உங்கள் (சபாநாயகர்) சார்பாக அவர்களிடம் (எதிர்க்கட்சி) ஒரு பிராமிஸ் கேட்கிறேன். அன்று யாரும் எழுந்து ஓடி விடக்கூடாது” என முதல்வர் விஜய் பேசிவிட்டு புறப்பட்டு சென்றார்.

உதயநிதி பதில்

இதற்கு உதயநிதி, ”இதைச் சொல்லிவிட்டு யார் ஓடிப்போனது என்பதை மக்கள் நேரலையில் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதை டிவியில் காட்டினார்களா என்று தெரியவில்லை. இந்த பதிலை ஒரு மணி நேரத்திற்கு முன் முதல்வர் இதை தெரிவித்து இருந்தால் இந்த பிரச்னை வந்திருக்காது.

முதல்வரின் பதிலுரைக்கு இன்னும் 3 நாட்கள் இருக்கின்றன. மீண்டும் எங்க மேல பலி போடாம கேட்ட கேள்விக்கு விளக்கத்த குடுங்க. நல்லா பிரிப்பேர் பண்ணிட்டு வாங்க என உதயநிதி கூறினார்.

தரமான பதிலடி

உடனே “அவர் ஏற்கனவே தயாராகி தான் வந்திருக்கிறார்” என சபாநாயகர் கூற, “அப்படி என்றால் இப்போதே அவர் பதிலளிக்கலாம்” என உதயநிதி கூறினார். தரமான பதிலடி முதல்வர் மூலமாக தரப்படும் என அமைச்சர் ராஜ்மோகன் திட்டவட்டமாக தெரிவித்தார்.

Source link