'தினமலர்' நாளிதழின் 'பிரின்டிங்' முறைகள்

‘தினமலர்’ நாளிதழின் ஆரம்ப காலத்தில், கையால் அச்சு கோர்க்கும் முறையே இருந்தது. அதன் பின், ‘லைனோடைப்’ எனும் இயந்திர அச்சு கோர்ப்பு உள்ளிட்ட முறைகள் கையாளப்பட்டன. இதையடுத்து, 1985ல் கலர் எழுத்துகள் அச்சிடும் முறைக்கு மாறியது.

திருநெல்வேலி அச்சகத்தில் இருந்து கலர் எழுத்துகளில் அச்சிடப்பட்ட நாளிதழ் வெளியிடப்பட்டது. அப்போதுதான், ‘வாரமலர்’ இதழும் கொண்டு வரப்பட்டது.

கடந்த 1985 முதல் இன்று வரை, அனைத்து பதிப்புகளும் கலர் எழுத்து அச்சுமுறையில் வெளிவந்து கொண்டிருக்கின்றன. உலக தரத்திற்கு இணையாக, தரச்சான்றிதழுடன், ‘தினமலர்’ நாளிதழ் கலர் அச்சில் வெளியாகி வருகிறது.

அதோடு, அச்சு இயந்திரங்கள் தானியங்கிகளாக மேம்படுத்தப்பட்டுள்ளன. இதனால், அச்சின்போது, இடையில் எங்கும் கைப்படாமல், ‘பண்டில்’ செய்யப்படுகிறது. பின் அவை வாகனங்களில் ஏற்றப்பட்டு, அதிகாலை 3:00 மணிக்கு வெளியே எடுத்து செல்லப்படுகின்றன.

அனைத்து ஏஜென்டுகளிடம் சென்று, வாசகர்களின் வீடுகளுக்கு பத்திரமாக சேருகின்றன. தினமலரின் அனைத்து அச்சகங்களும், ஒரு மணி நேரத்துக்கு 70 ஆயிரம் பிரதிகள் அச்சு செய்யும் அளவில் மேம்படுத்தப்பட்டு உள்ளன.

Source link