தூத்துகுடி: தமிழக முதல்வர் பஞ்ச் டயலாக் பேசுவதற்கு தான் வாயை திறக்கிறார் எனவும், சட்டமன்றமாக இருக்கட்டும்.. மற்ற நேரமாக இருக்கட்டும்.. எதற்கும் விளக்கம் தராத முதலமைச்சர்.. பத்திரிகையாளர்களை சந்திக்காத ஒரு முதலமைச்சர் நம்முடைய முதலமைச்சர் விஜய் என திமுக துணைப் பொதுச் செயலாளரும், எம்பியுமான கனிமொழி மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும், எதிர்க்கட்சியில் இருக்கக்கூடியவர்களை கைது செய்யக்கூடியதிலேயே காட்டக்கூடிய ஆர்வம்.. குற்றம் செய்யக்கூடியவர்களை கைது செய்வதில் அக்கறை இல்லை என்பது தான் உண்மை எனவும் கூறியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் மற்றும் மஞ்சள் நீர் காயல் பகுதியில் கடந்த திமுக ஆட்சியில் சுமார் 9 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்பட்ட குடிநீர் திட்ட பணிகள் குறித்து தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும் திமுக துணை பொது செயலாளருமான கனிமொழி ஆய்வு மேற்கொண்டார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்,” மாலத்தீவு சிறை பிடிக்க மீனவர்கள் தொடர்பாக ஒன்றிய அரசாங்கத்திடம் எடுத்துக் சொல்லி இருக்கிறேன். அமைச்சரிடம் பேசி உள்ளேன். அங்கே இருக்கக்கூடிய மீனவர்களை மீட்பதற்கு எல்லா ஏற்பாடுகளும் செய்து விட்டார்கள்.
படகுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை குறைக்கவும் முயற்சி செய்கிறார்கள். போலீஸ் டிபார்ட்மெண்ட் தவெகவின் ஐடி விங் போன்று எனக்கு பதில் சொல்லக்கூடிய நிலைமை வந்துவிட்டது. குற்றங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பது சுட்டிக்காட்ட வேண்டியது மக்கள் பிரதிநிதிகளான கடமை. அதற்கு போலீஸ் டிபார்ட்மென்ட் குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க முயற்சி எடுக்க வேண்டும். அவர்கள் நேரத்தை வந்து அரசியலில் இருப்பவர்களுக்கு பதில் சொல்லிக் கொண்டிருப்பது அதிசயமாகவும் வேடிக்கையாகவும் இருக்கிறது.
அதே நேரத்தில் தமிழக வெற்றி கழகம் ஆட்சிக்கு வந்த பிறகு 50 கைதிக்கு மேல் தப்பி சென்றிருக்கக் கூடிய ஒரு சூழல் அதை தாண்டி பல குற்றங்களில் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகளிலே ஈடுபட்டு இருக்கிறார்கள். அதோடு இல்லாமல் குற்றவாளிகளை எதிர்க்கட்சியில் இருக்கக்கூடியவர்களை கைது செய்யக்கூடியதிலேயே காட்டக்கூடிய ஆர்வம், குற்றம் செய்யக்கூடியவர்களை கைது செய்வதிலே ஆட்சியில் இருக்கக்கூடியவர்களுக்கு அக்கறை இல்லை என்பது தான் உண்மமை.
தமிழக முதல்வர் பஞ்ச் டயலாக் பேசுவதற்கு தான் வாயை திறக்கிறதாக இருக்கிறார். சட்டமன்றமாக இருக்கட்டும், மற்ற நேரங்களில் இருக்கட்டும் அவர் எதற்கும் விளக்கம் தராத முதலமைச்சர். பத்திரிகையாளர்களை சந்திக்காத ஒரு முதலமைச்சர் நம்முடைய முதலமைச்சர் விஜய்.
ஆட்சியில் பொறுப்பிற்கு வந்த பிறகு தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது ஒன்றுதான். திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் கட்டி முடிக்கப்பட்ட பல்வேறு திட்டங்களை இன்றைக்கு அவர்கள் கட்டினார்கள் என்று கூட சொல்லாமல், தவெக ஆட்சிக்குப் பொறுப்பு வந்த பின்பு நான்குகே மாதத்தில் கட்டி முடித்ததாக கருத்துருவை உருவாக்கி ரில்ஸை போட்டு திறந்து கொண்டிருக்கிறார்கள்
இப்போது திருச்செந்தூருக்கு 1.1 எம்எல்டி தண்ணீர் தான் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் திருச்செந்தூர் கோயிலுக்கு வரக்கூடிய பக்தர் அதிகரிப்பு காரணமாக 3.8 எம்எல்டி மேல் ஒவ்வொரு நாளும் தண்ணீர் தேவைப்படுகிறது.ஆனால் 1.1 எம் எல் டி தான் குடிநீர் வழங்கப்படுகிறது இதனை அதிகரிக்கத் தான் திமுக ஆட்சியில் திட்டம் கொண்டு வரப்பட்டது ” என்றார்.
