சென்னை: தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க ரூ.100 கோடி வரை லஞ்சம் வசூலித்ததாக திமுக முன்னாள் அமைச்சர் மகேஷ், 26ம் தேதி மாலை கைது செய்யப்பட்டார். அப்போது, திமுக எம்எல்ஏ சேகர்பாபு, எம்பி கலாநிதி வீராசாமி உள்ளிட்ட திமுகவினர், போலீசாரை தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சென்னை வேப்பேரி காவல் ஆணையர் அலுவலக வாசலில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சேகர்பாபு, கலாநிதி வீராசாமி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்தல், அவமரியாதையாக பேசுதல் என 2 பிரிவுகளில் வழக்குப்பதியப்பட்டுள்ளது.
