திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நீதிமன்ற காவல்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் கடந்த பதினெட்டாம் தேதி நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் விளாத்திகுளம் எம்எல்ஏ ஜீ.வி. மார்க்கண்டேயன் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜயை கடுமையாக விமர்சனம் செய்து பேசியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து இன்று காலை 5 மணி அளவில் விளாத்திகுளம் அம்பாள் நகரில் உள்ள அவரது இல்லத்துக்கு மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி கண்ணன் விளாத்திகுளம் டிஎஸ்பி சுந்தரபாண்டியன் குற்றப் பிரிவு இன்ஸ்பெக்டர் ஜானகி மற்றும் நூற்றுக்கணக்கான போலீசார் வருகை தந்தனர். காலை 6 மணி அளவில் போலீசார் ஜீ. வி. மார்க்கண்டேயனை அதிரடியாகக் கைது செய்தனர்.

அதன் பின்னர் அவரை தூத்துக்குடியில் உள்ள மாவட்ட எஸ்பி அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர். அவர் மீது தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் பிஎன்எஸ் சட்டப் பிரிவுகள் 351 (3), 352, 353 (2) ஆகிய மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். எம்எல்ஏ ஜீ.வி. மார்க்கண்டேயன் திமுகவின் முன்னணி நிர்வாகிகள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 9 மணிநேர விசாரணைக்கு பின் இன்று மாலை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு மருத்துவப் பரிசோதனைக்காக திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனை போலீசார் அழைத்துச் சென்றபோது செய்தியாளர்களை நோக்கி எம்எல்ஏ மார்க்கண்டேயன் ”விசாரணையின்போது போலீசார் என்னை தாக்க முயற்சித்தனர். துப்பாக்கி முனையில் என்னை மிரட்டினர். என்னை அழைத்துச் சென்று அடிக்கப் பார்க்கிறார்கள்” என ஆவேசமாகப் பேசினார்.

இந்நிலையில் மருத்துவப்பரிசோதனைக்கு பின் நீதிபதி சுமதி முன் முன்னிறுத்தப்பட்ட நிலையில் ஜீ.வி.மார்க்கண்டேயனை ஆகஸ்ட் 3 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். முன்னதாக போலீசார் தரப்பில் போலீஸ் காவலில் எடுத்து ஜீ.வி.மார்க்கண்டேயனை போலீசார் விசாரிக்க அனுமதி கோரப்பட்ட நிலையில், அதனை மறுத்த நீதிபதி 13 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.

Source link