நாம் தமிழர் கட்சியை சார்ந்த நட்சத்திர பேச்சாளரான சாட்டை துரைமுருகன் தொடர்ச்சியாக வெளியிட்டு வரும் அரசியல் வீடியோக்கள் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகின்றன. ஒருப்பக்கம் விமர்சனம், மற்றொரு பக்கம் வரவேற்பு என அவருடைய காணொளிகள் இணையத்தில் பேசு பொருளாவது வழக்கமான ஒன்று. இதனிடையில் சாட்டை துரைமுருகனின் புதிய வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் கவனம் ஈர்த்து வருகிறது. அந்த காணொளி அவரின் வழக்கமான அரசியல் வீடியோ அல்ல. தனியார் யூடியூப் சேனலுக்கு சாட்டை துரைமுருகன் அளித்த நேர்காணல் காணொளி.
சாட்டை துரைமுருகன் பேட்டி
அதில் அரசியல் சாராத தன்னுடைய மற்றொரு பக்கம் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார் சாட்டை துரைமுருகன். குறிப்பாக முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினை சந்தித்தது தொடர்பான நிகழ்வுகள் குறித்து அவர் மனம் திறந்து பேசியுள்ளார். அதாவது மு.க. முத்துவின் மறைவிற்கு பின்பாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வீட்டிற்கு நேரில் வந்து நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆறுதல் தெரிவித்தார்.
மு.க. ஸ்டாலினுடன் சந்திப்பு
அப்போது அவருடன் சாட்டை துரைமுருகனும் சென்றிருந்தார். இந்த சந்திப்பு அரசியல் ரீதியாக பல விதமான விமர்சனங்களை கிளப்பி இருந்தது. இந்நிலையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுடன் இந்த சந்திப்பு குறித்து தான் நேர்காணலில் பேசியுள்ளார் சாட்டை துரைமுருகன். அதில், கோபத்தில் சில பேரை நம்மை விமர்சனம் பண்ணி இருப்போம். ஆனால் நேர்ல பார்க்கும்போது அவுங்க ரொம்ப தன்மையாக நடந்து கொள்வார்கள். இவுங்களையா நம்ம பேசிட்டோம் அப்படியெல்லாம் தோன்றி இருக்கு.
வீட்டு வாசல் வரை வந்து வரவேற்றார்
குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் ஐயாவுடைய வீட்டுக்கு போயிருந்தேன். அவரை கடுமையாக நான் விமர்சனம் செய்து இருக்கிறேன். ஆனால் அவுங்களுக்கு அவசியமே கிடையாது. வீட்டு வாசல் வரைக்கு வந்து வரவேற்றாங்க. சீமான் அண்ணன் வர்றாங்க. பொதுவாக உள்ளே இருந்து வரவேற்கலாம். ஆனால் வீட்டு வாசல் வரைக்கும் வந்து வரவேற்றாங்க என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
மு.க. முத்து மறைவு
அதோடு, அந்த வீட்டில் இன்னொன்று எங்களுக்கு என்ன ரொம்ப பிடித்திருந்தது என்றால். நாங்கள் சென்று இருந்தது மு.க. முத்து அவர்களுடைய மறைவுக்கு ஆறுதல் சொல்வதற்கும், இரங்கல் தெரிவிப்பதற்கும். அங்க மு.க. தமிழரசு அவர்களுடைய மகள் வந்து இருக்காங்க. அவுங்க அங்க இருக்கிற தன்னுடைய பெரியப்பா மு.க. ஸ்டாலின் , உதயநிதிக்கு வணக்கம் வைச்சுட்டு போகலாம். ஆனால் சீமான் அண்ணன் உள்ளிட்ட எங்கள் அனைவரையும் பார்த்து வண்ணம் வைச்சுட்டு போறாங்க.
வைரலாகும் வீடியோ
ஒரு சம்பந்தமே இல்லாத நபர்தான். ஆனால் அரசியலாக எவ்வளவு பண்படுத்தப்பட்டு இருக்காங்க. எவ்வளவு மரியாதையாக நடந்து இருக்காங்க. இதெல்லாம் நம்ம யாரை எதிர்த்து பேசுகிறோமோ அவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை அந்த சம்பவம் மூலமாக தெரிந்துக் கொண்டேன் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உடனான சந்திப்பு குறித்து பேசியுள்ளார் சாட்டை துரைமுருகன். அவரின் இந்த வீடியோவை சோஷியல் மீடியாவில் திமுகவினர் அதிகளவில் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
உதயநிதி ஸ்டாலின் உரை ! உன்னிப்பாக கவனித்த அமைச்சர்கள்
அதோடு கடுமையாக விமர்சித்தவரும் நெகிழ்ந்து பாராட்டும் அளவிற்கு மு.க. ஸ்டாலினின் அணுகுமுறை உள்ளது. இதே போன்று இப்போது ஆட்சி மாறியதும் அவரை விமர்சிப்பவர்கள் சீக்கிரமே மு.க. ஸ்டாலினை பாராட்டுவார்கள் எனவும் திமுகவினர் சாட்டை துரைமுருகனின் வீடியோவை இணையத்தில் வைரலாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.
Source link
