இன்று உலக முதலுதவி தினம்: உங்கள் முதலுதவி பெட்டியில் என்னென்ன இருக்க வேண்டும்

உலக முதலுதவி தினம்

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாத இரண்டாவது சனிக்கிழமை உலக முதலுதவி தினம் அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு செப்டம்பர் 12, 2026 அன்று உலக முதலுதவி தினம் கொண்டாடப்படுகிறது.

நோக்கம்

அவசர காலங்களில் உரிய மருத்துவ உதவி கிடைக்கும் வரை ஒருவரின் உயிரை காப்பாற்ற உதவுவதும், பயிற்சி மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதும் இதன் முக்கிய நோக்கமாகும்.

உடனடி பராமரிப்பு

தொழில்முறை மருத்துவ ரீதியிலான உதவி கிடைகும் வரை பாதிக்கப்பட்டவர்களுக்கு அடிப்படை பராமரிப்பை வழங்குவதே இதன் நோக்கமாகும். சர்வதேச செஞ்சிலுவை மற்றும் செம்பிறை சங்கங்களின் கூட்டமைப்பு கூற்றின் படி முதலுதவி என்பது யார் வேண்டுமானாலும், அவர்கள் எங்கிருந்தாலும் கற்றுக்கொண்டு பயன்படுத்தக்கூடிய ஒன்றாகும்.

இதனால், அடிப்படைப் பயிற்சி பெறுவதும், வீட்டில் தேவையான பொருட்கள் நிரம்பிய முதலுதவிப் பெட்டியை வைத்திருப்பதும் மிகவும் முக்கியமானது என்று கூறப்படுகிறது.

முக்கியமான முதலுதவிகள்

குறிப்பாக மனித உடலில் ஏற்படும் வெட்டுக்காயங்கள் மற்றும் இரத்தப்போக்கிற்கு முதலுதவியாக, முடிந்தால் உங்கள் கைகளைக் கழுவி, கிருமி நீக்கம் செய்யப்பட்ட அல்லது சுத்தமான துணியைப் பயன்படுத்தி காயத்தின் மீது உறுதியான, நேரடி அழுத்தத்தைக் கொடுக்கவும். காயத்தைச் சரிபார்க்க மீண்டும் மீண்டும் கட்டை அவிழ்ப்பதற்குப் பதிலாக, காயத்தின் மீது அழுத்தத்தைத் தொடர்ந்து கொடுக்கவும்.

அதிகப்படியான அல்லது கட்டுப்படுத்த முடியாத இரத்தப்போக்கிற்கு அவசர மருத்துவ கவனிப்பு அவசியமான ஒன்று. தீக்காயங்களால் பாதிக்கப்பட்டவர்கள், பாதிக்கப்பட்ட பகுதியை சுமார் 20 நிமிடங்களுக்கு ஓடும் குளிர்ந்த நீரின் கீழ் குளிர்விக்கவும்.

பனிக்கட்டி, வெண்ணெய், பற்பசை அல்லது பிற வீட்டுப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. பெரிய, ஆழமான அல்லது கடுமையான தீக்காயங்களுக்கு மருத்துவர்களின் அவசர உதவி தேவை.

முதலுதவி பெட்டியில் இருக்க வேண்டியவை

வீட்டில் ஒரு அடிப்படை முதலுதவிப் பெட்டியானது, எளிதில் கண்டுபிடிக்கக்கூடியதாகவும், தவறாமல் சரிபார்க்கப்பட வேண்டியதாகவும் இருக்க வேண்டும். அதில் பின்வருவன அடங்கியிருக்கலாம்:

கிருமியழிக்கப்பட்ட காஸ் பேட்கள் மற்றும் ஒட்டும் பேண்டேஜ்கள்

மருத்துவ ஒட்டும் நாடா

கிருமிநாசினி துடைப்பான்கள் அல்லது கரைசல்

சுத்தமான ஒருமுறை பயன்படுத்தும் கையுறைகள்

பருத்தி அல்லது பொருத்தமான காயம் சுத்தம் செய்யும் பொருட்கள்

கத்தரிக்கோல்

இடுக்கி

ஒரு டிஜிட்டல் வெப்பமானி

உடனடி குளிர் பொதி

ஒரு முக்கோணக் கட்டு அல்லது எளிய கட்டு

ஒரு சுத்தமான அவசரகால போர்வை

CPR முகக் கவசம் அல்லது சுவாசத் தடுப்பான்

அவசரத் தொடர்பு எண்களின் பட்டியல்

வழக்கமாகத் தேவைப்படும் தனிப்பட்ட மருந்துகள்

அகியவைகள் உங்கள் முதலுதவி பெட்டியில் இருக்க வேண்டும்.

எப்போது மருத்துவர் உதவி தேவை

முதலுதவி என்பது முதல் படி மட்டுமே, அதுவே கடுமையான இரத்தப்போக்கு, சுயநினைவு இழப்பு, மூச்சுத்திணறல், மார்பு வலி, பக்கவாதம் ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம், கடுமையான தீக்காயங்கள், பெரும் காயம், விஷ பாதிப்பு, வலிப்பு அல்லது கடுமையான ஒவ்வாமை ஏற்ப்டும் பட்சத்தில் உடனடி மருத்துவர் உதவிதேவை.

மேலும் அடிப்படை முதலுதவி வழிக்காட்டுதல்களை பின்பற்றுதல் எனபது அனைவருக்கும் ஒரு அவசநிலையை பாதுக்காப்பாக மாற்றுவது ஆகும்.

Source link