திருச்சியில் இன்று தமிழக பா.ஜ., ஆலோசனை

சென்னை: பா.ஜ., மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்கள் ஆலோசனை கூட்டம், திருச்சி சமயபுரத்தில் இன்று நடக்கிறது.

பா.ஜ., மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில், காலை 10:00 மணிக்கு கூட்டம் தொடங்குகிறது.

இதில், தமிழக பா.ஜ., மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன், இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

இந்த கூட்டத்தில், உள்ளாட்சித் தேர்தல், இடைத்தேர்தல் குறித்தும், பா.ஜ.,வின் அடுத்தகட்ட பணிகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

Source link