கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள கைப்பமங்கலம் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு சுமார் 11:40 மணி அளவில் நெடுஞ்சாலை அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது கார் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டு உள்ளது. இதில், காரில் இருந்த 8 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், காவல்துறையினர் அடங்கிய மீட்பு குழு காரில் இருந்த இளைஞர்களை போராடி மீட்டனர்.
தவறு செய்தவர் யாராக இருந்தாலும் தப்ப முடியாது; லஞ்சம் வாங்கினால் உடனே தண்டனை; வாட்ஸ் அப் எண்ணை பகிர்ந்த கீர்த்தனா
உயிரிழந்த 8 பேரின் உடலும் பிரேத பரிசோதனைக்காக திருச்சூர் மருத்துவக் கலூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாடு பதிவு எண் கொண்ட அந்த கார் குருவாயூரிலிருந்து கொடுங்கல்லூரி நோக்கி சென்று கொண்டிருந்த போது லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உயிரிழந்தவர்கள் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் என சந்தேகிக்கப்படுவதாக காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும், உயிரிழந்த மாணவர்கள் யார்? எப்படி விபத்து ஏற்பட்டது என்பது குறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
