திருமலை,
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் டிசம்பர் மாதம் வழிபட தரிசன டிக்கெட்டுகள், தங்கும் விடுதிகளில் அறைகள் ஒதுக்கீடு ஆன்லை னில் வெளியிடப்பட உள்ளதாக, தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள்
திருப்பதி ஏழுமலையானை டிசம்பர் மாதம் வழிபட தரிசன டிக்கெட்டு களும், தங்கும் விடுதிகளில் அறைகள் ஒதுக்கீடும் வெளியிடப்பட உள் ளன. அதற்கான தகவல்கள் திருமலை திருப்பதி தேவஸ்தான ஆன்லை னில் வெளியிடப்படும்.
முதலில் ஸ்ரீவாரியின் ஆர்ஜித சேவைகளான சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை, அஷ்டதள பாத பத்மாராதனை ஆகிய சேவைகளுக்கான தரி சன டிக்கெட்டுகள் ஒதுக்கீடு வருகிற 19-ந்தேதி காலை 10 மணிக்கு ஆன் லைனில் வெளியிடப்படும்.
இந்த டிக்கெட்டுகளுக்கான மின்னணு குலுக்கலில் பங்கேற்க 21-ந்தேதி காலை 10 மணி வரை ஆன்லைனில் பதிவு செய்யலாம். குலுக்கலில் தேர்வு செய்யப்படுபவர்கள் 21 முதல் 23-ந்தேதி மதியம் 12 மணிக்குள் கட்டணம் செலுத்தினால் டிக்கெட்டுகள் உறுதி செய்யப்படும்.
கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவை ஆகியவற்றுக்கான டிக்கெட்டுகள் வருகிற 22-ந்தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும்.
ரூ.300 டிக்கெட்டுகள்
மெய்நிகர் சேவைகள் மற்றும் அவற்றுக்கான தரிசன நேர ஒதுக்கீடுகள் 22-ந்தேதி மாலை 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும்.
அங்கப்பிரதட்சண டோக்கன் ஒதுக்கீடு 23-ந்தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும்.
ஸ்ரீவாணி அறக்கட்டளை தரிசன டிக்கெட்டுகள் ஒதுக்கீடு 23-ந்தேதி காலை 11 மணிக்கு வெளியிடப்படும்.
முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நீண்ட கால நோய்களால் பாதிக் கப்பட்டவர்கள் சாமி தரிசனம் செய்ய வசதியாக இலவச சிறப்பு தரிசன டோக்கன் ஒதுக்கீடு 23-ந்தேதி மாலை 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும்.
ரூ.300 கட்டண சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் ஒதுக்கீடு 24-ந்தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும்.
தங்கும் விடுதிகளில் அறைகள் ஒதுக்கீடு
திருமலை மற்றும் திருப்பதியில் தேவஸ்தானத்துக்கு சொந்தமான தங்கும் விடுதிகளில் உள்ள அறைகளுக்கான ஒதுக்கீடு 24-ந்தேதி மாலை 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும். ஸ்ரீவாரி ஆர்ஜித சேவைகள் மற் https://ttdevasthanams.ap.gov.in இணையதளம் மூலம் பக்தர்கள் முன்பதிவு செய்யலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
