பெங்களூரு மெட்ரோ ரயில் 3வது கட்டம்: ஜே.பி நகர் டூ கெம்பபுரா, ஹொசஹள்ளி டூ கடபகெரே- 2032ல் முடிக்க திட்டம் – bmrcl tender process for bengaluru phase 3 metro rail project to complete 2032

தலைநகர் பெங்களூருவில் மூன்றாம் கட்ட மெட்ரோ ரயில் சேவையை பயன்பாட்டிற்கு கொண்டு வரும் நோக்கில் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதற்கான டெண்டர் கோரப்பட்டுள்ள நிலையில் இடிக்கப்பட வேண்டிய கட்டடங்கள் குறித்து கணக்கெடுக்கப்பட்டுள்ளன.

கர்நாடகா மாநிலத் தலைநகர் பெங்களூருவில் கடந்த 2017ஆம் ஆண்டு முதல்கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தின் கீழ் பையப்பனஹள்ளி டூ மைசூரு ரோடு வரையிலான பர்பிள் லைன், நாகசந்திரா டூ எலசனஹள்ளி வரையிலான கிரீன் லைன் ஆகியவை மக்கள் பயன்பாட்டிற்கு வந்தன. இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் பர்பிள் லைனில் ஒயிட்ஃபீல்டு டூ சல்லகட்டா, கிரீன் லைனில் மாதவரா டூ சில்க் இன்ஸ்டிடியூட், ஆர்.வி.ரோடு டூ பொம்மசந்திரா வரையிலான எல்லோ லைன் ஆகியவை தொடங்கி வைக்கப்பட்டது.

நம்ம மெட்ரோ 3ஆம் கட்ட திட்டம்

தற்போது பிங்க் லைனில் கலெனா அக்ரஹாரா டூ நாகவரா இடையில் 21 கிலோமீட்டர் தூரத்திற்கு பணிகள் நடந்து வருகின்றன. நடப்பாண்டு இறுதிக்குள் பயன்பாட்டிற்கு வந்துவிடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த சூழலில் பெங்களூரு மெட்ரோ மூன்றாவது ரயில் சேவை திட்டத்திற்கான முன்னேற்பாடுகள் தொடங்கியுள்ளன. இதில் ஜே.பி.நகர் 4வது பேஸ் டூ கெம்பபுரா (32.15 கி.மீ), ஹொசஹள்ளி டூ கடபகெரே (12.5 கி.மீ) ஆகிய இரண்டு வழித்தடங்கள் அமைக்கப்படுகின்றன. இவற்றில் தலா 22 மற்றும் 9 ரயில் நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

530 கோடிக்கு புது Project மாறப்போகும் சென்னை! August மாசத்தில் Upgarde

BMRCL டெண்டர் – இடிக்கப்படும் கட்டடங்கள்

வரும் 2032ஆம் ஆண்டுக்குள் பணிகளை முடித்து மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைக்க முடிவு செய்துள்ளனர். கடந்த வாரம் இந்த திட்டத்திற்காக பெங்களூரு மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் டெண்டர் கோரப்பட்டது. அதன்படி, மூன்றாம் கட்ட மெட்ரோ ரயில் திட்ட வழித்தடத்தில் குறுக்கிடும் அரசு மற்றும் தனியார் கட்டடங்கள், பிற கட்டுமானங்களை இடிக்கவும், மின் கம்பங்கள் உள்ளிட்டவற்றை இடமாற்றவும் பணிகள் நடைபெறவுள்ளது. இந்த முதல்கட்ட செயல்பாடுகள் மட்டுமே ஓராண்டிற்கு நீடிக்கும் எனவும், சுமார் 17 கோடி ரூபாய் அளவிற்கு செலவாகும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

பெங்களூரு 3ஆம் கட்ட மெட்ரோ: கட்டடங்கள் இடிக்கப்படவுள்ள வழித்தடங்கள்

வ.எண் வழித்தடங்கள் 1 ஜே.பி.நகர் 4வது பேஸ் ஸ்டேஷன் டூ மைசூரு ரோடு ஸ்டேஷன் (10.88 கி.மீ) 2 மைசூரு ரோடு ஸ்டேஷன் டூ கொட்டிகேபால்யா ஜங்ஷன் (6.2 கி.மீ) 3 கொட்டிகேபால்யா ஜங்ஷன் டூ சுன்கடகட்டே பணிமனை நுழைவுவாயில் மற்றும் வெளியேறு பாதை (1.64 கி.மீ) 4 சுமனஹள்ளி ஸ்டேஷன் டோ கெம்பபுரா ஸ்டேஷன் (13.17 கி.மீ) 5 ஹொசஹள்ளி ஸ்டேஷன் டூ கடபகெரே ஸ்டேஷன் (12.5 கி.மீ)

நம்ம மெட்ரோ 3வது கட்ட திட்டத்தின் பயன்கள்

பெங்களூரு நகரின் மேற்கு மற்றும் வடக்கு புறநகர் பகுதிகள் நேரடியாக இணைக்கப்படும். உதாரணமாக நாகர்பவி, பீன்யா, சுமனஹள்ளி, மகதி ரோடு ஆகியவை நகருடன் இணைக்கப்படுவதால் பொதுமக்கள் விரைவாக வந்து செல்ல உதவிகரமாக இருக்கும். புதிய ஆரஞ்சு லைன் வழித்தடமானது ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள பர்பிள் லைன், கிரீன் லைன் ஆகியவற்றுடனும், புதிதாக அமைக்கப்படும் பிங்க் லைன், ப்ளூ லைன் ஆகியவற்றுடனும் இணைக்கப்படுகிறது. இந்த வழித்தடத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் ரியல் எஸ்டேட் வர்த்தகம் பெரிதும் வளர்ச்சி அடையும். வீட்டு வாடகை உயரும். உள்ளூர் பொருளாதாரம் மேம்படும். புதிய வர்த்தக நிறுவனங்கள், கடைகள் வருவதற்கு வாய்ப்பாக அமையும்.

Source link