உண்மையைத் தேடி அலையும் கார்த்திக்.. அவமானப்படும் சாமுண்டீஸ்வரி – கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்
கார்த்திகை தீபம் சீரியலை நேற்றைய எபிசோடில் ராஜராஜன் மீது பார்வதி என்ற பெண் பழி சுமத்திய நிலையில் இன்று, ராஜராஜன் வீட்டுக்கு வர சாமுண்டீஸ்வரி அவரை வாசலிலேயே நிற்க வைத்து உங்க மேல நான் மிகப்பெரிய நம்பிக்கை வைத்திருந்தேன் ஆனா நீங்க இப்படி பண்ணுவீங்கன்னு எதிர்பார்க்கல என ஆவேசப்படுகிறாள்.
ஊர்க்காரர்கள் முன்னாடி இப்படியொரு விஷயம் நடந்தது மிகப்பெரிய அவமானமா இருக்கு என கோபப்படுகிறாள். ராஜராஜன் பேச முயற்சி செய்தும் சாமுண்டீஸ்வரி கோபத்தை கொட்ட ஒரு கட்டத்தில் மாப்பிள்ளை என் மேல தப்பு இல்ல என்பதை நிரூபிப்பார் என சவால் விடுகிறார். அடுத்ததாக சந்திரகலாவுக்கு பழி சுமத்திய பார்வதி இடமிருந்து ஃபோன் கால் வருகிறது. அடுத்து 48 மணி நேரத்தில் துபாய் போய்விடுவேன் என பார்வதி சொல்ல இதையெல்லாம் ரேவதி ஒட்டு கேட்டு விடுகிறாள்.
மறுபக்கம் கார்த்தியும் மயில்வாகனமும் அந்த பெண்ணின் ஊருக்கு சென்று விசாரிக்க அவளது கணவர் கணேசனை பார்க்கின்றனர். கணேசன் பார்வதியை பிரிந்து வாழ்வதாகவும் பணத்திற்காக பார்வதி எதையும் செய்வாள் என்ற விஷயத்தையும் சொல்கிறான். மிகப்பெரிய தொகையை வாங்கிட்டு தான் பார்வதி இப்படி ஒரு பழியை சுமத்தி இருப்பார் அதை ஆதாரத்தோடு நிரூபிக்கணும் என மூவரும் முடிவு எடுக்கின்றனர்.
இந்த சமயத்தில் ரேவதி கார்த்திக்கு போன் செய்து சந்திரகலா பேசிய விஷயத்தை சொல்கிறாள். சாமுண்டீஸ்வரி கோவிலுக்கு வர சிவனாண்டி ஏற்பாடு செய்த பெண்கள் சாமுண்டீஸ்வரி அவமானப்படுத்தி பேச வீட்டுக்கு வந்தவள் ராஜ ராஜனிடம் என்னால் வெளியே தலை காட்ட முடியல என ஆவேசப்படுகிறாள். இதனால் ராஜராஜன் உடைந்து போக அவரது மூன்று மகள்களும் உங்க மேல எந்த தப்பும் இல்லை என கார்த்திக் நிரூபிப்பார் என ஆறுதல் சொல்கிறார்கள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அப்பத்தாவுக்கு காத்திருந்த ஷாக்.. சட்னியால் வந்த சண்டை – வாகை சூடவா இன்றைய எபிசோட் அப்டேட்
வாகை சூடவா சீரியலில் நேற்றைய எபிசோடில் ஜீவா போட்டியில் ஜெயித்து தங்க நகையுடன் கோவிலுக்கு வந்த நிலையில் இன்று அதாவது, கோவிலுக்கு வந்தாச்சு ஜீவா திட்டமிட்டபடி தாலி பிரித்து போடும் நிகழ்ச்சியை நடத்தி முடிக்க ஆதி கடுப்பாகிறான். ரம்யா வாசுதேவனிடம் நீங்க என்ன பண்ணுவீங்களோ ஏது பண்ணுவீங்களோ எனக்கு தெரியாது. ஆதியும் மீனாட்சியும் ஒன்று சேர வேண்டும் என கட் அண்ட் ரைட்டாக சொல்ல வாசுதேவன் என்ன செய்வது என யோசிக்கிறார்.
இதையடுத்து வீட்டுக்கு வந்து ஜீவா மீனாட்சியிடம் சிலம்பாட்டத்தில் ஜெயித்த விஷயம் பேப்பரில் வந்திருப்பதை பில்டப் ஆக படித்துக் காட்ட மீனாட்சி சிலம்பாட்டத்தில் அடிவாங்கியவன் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதாகவும் அவன் உயிருக்கு ஆபத்தை விளைவித்தவனை போலீசார் வலை வீசி தேடி வருவதாகவும் மீனாட்சி நியூஸ் படித்து வெறுப்பேற்றுகிறாள்.
அடுத்ததாக அப்பத்தாவுக்கு பிடிக்காத சட்னியை இட்லியையும் கொண்டு வந்து கொடுக்க அப்பத்தா சாப்பிட மாட்டேன் என அடம் பிடிக்க லோகு உங்களுக்கு பிடிச்ச சட்னியை செய்ய சொல்றேன் என சமாதானம் செய்கிறார். இங்கு வந்த ஜீவா இந்த இட்லிய நீ சாப்பிட மாட்டாளா என்று கேட்டு அதை எடுத்து சாப்பிட்டு அப்பத்தாவை மேலும் வெறுப்பேற்றுகிறான். அப்பத்தா இவனும் மீனாட்சியும் ஒன்று சேர்ந்தால் நாம இந்த வீட்டில் ராஜ்யம் பண்ண முடியாது என கணக்கு போடுகிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அமெரிக்காவுக்கு பறக்க நினைத்த மகா.. திரு கொடுத்த ட்விஸ்ட் – திருமாங்கல்யம் இன்றைய எபிசோட் அப்டேட்
திருமாங்கல்யம் சீரியலில் நேற்றைய எபிசோடில் மகா அமெரிக்காவுக்கு கிளம்ப திரு வழி அனுப்ப வந்த நிலையில் இன்று மகா போர்டிங் பாஸ் எல்லாம் வாங்கிக்கொண்டு உள்ளே செல்லும் தற்போது மகா மற்றும் திரு என இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி பிரிந்து கடந்து செல்கின்றனர். ஒரு கட்டத்தில் திரு லட்சுமி என கூப்பிட மகா திரும்பி பார்த்து மீண்டும் ஏர்போர்ட்டுக்குள் நடக்க தொடங்க மீண்டும் லட்சுமி என்ற குரல் கேட்டு திரும்பி வருகிறாள்.
மகா வெளியே வந்ததும் திரு அந்த டிக்கெட்டை கொடு என வாங்கி கிழித்து போடுகிறான். மேலும் நீ அமெரிக்கா போக வேண்டாம். இங்கேயே இரு உனக்கான ஒரு நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுக்க வேண்டியது என்னுடைய பொறுப்பு என சொல்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
