தீபாவளிக்காக தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு; நவ.9ம் தேதி அரசு விடுமுறை

சென்னை; தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை என்று தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் 8ம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. அதற்கு முந்தைய நாள் சனிக்கிழமை வார இறுதி நாள் என்பதோடு விடுமுறை நாள் ஆகும். எனவே சொந்த ஊர்களில் தீபாவளியை கொண்டாடிவிட்டு ஊர் திரும்ப வசதியாக நவம்பர் 9ம் தேதியான திங்கட்கிழமை விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து இருந்தனர்.

அவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக தீபாவளிக்கு மறுநாள் நவ.9ம் தேதி (திங்கட்கிழமை) அரசு விடுமுறை விடப்படுவதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது. இதற்கான அரசாணையையும் தமிழக அரசு வெளியிட்டு இருக்கிறது.

அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

நவம்பர் 9ம் தேதி விடுமுறை விடப்படுவதால் அதனை ஈடு செய்யும் வகையில் நவம்பர் 28ம் தேதி பணிநாளாக செயல்படும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Source link