துபாய் நகை வடிவமைப்பாளர்கள் உருவாக்கிய ஜிமிக்கிக்கு மவுசு; கின்னஸ் உலக சாதனைகளை முறியடித்து அசத்தல்

-நமது நிருபர்-

துபாயைச் சேர்ந்த பிரபல ஜோய் ஆலுக்காஸ் நகை நிறுவனம், 16.5 கிலோ எடையில் பிரம்மாண்டமான தங்க ஜிமிக்கியை உருவாக்கி உள்ளது. துபாய் கோல்டு டிஸ்ட்ரிக்டில் உள்ள ‘ஜுவல் ஆப் ஜாய்’ விற்பனையகத்தில் இந்த பிரம்மாண்ட ஜிமிக்கி காட்சிப் படுத்தப்பட்டது.

1.215 மீட்டர் நீளமும் 0.682 மீட்டர் விட்டமும் கொண்ட இந்தக் காதணிகளை செய்து முடிக்க, 55 திறமையான கைவினைஞர்களுக்குப் பல மாதங்களும் 5,840 மணி நேர உழைப்பும் தேவைப்பட்டது.

இதற்கு ‘மயூரா சஹஸ்ரா’ (Mayura Sahasra) என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஜோடி ஜிமிக்கிகள் முழுவதும் 22 கேரட் தங்கத்தால் செய்யப்பட்டுள்ளது. இதன் மொத்த எடை 16.514 கிலோ கிராம்.

துபாயில் இரண்டு கின்னஸ் உலக சாதனைகளை முறியடித்தது. ஜோயாலுக்காஸ் ஜுவல்லரியால் உருவாக்கப்பட்ட ஜிமிக்கிகள், உலகின் மிக அதிக எடை மற்றும் மிகப்பெரிய தங்கக் ஜிமிக்கிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகளாக, தங்க நகரமான துபாயுடன் இணைந்து ஜோயாலுக்காஸ் வளர்ந்து வருகிறது.

இந்தச் சாதனையை துபாய்க்கும், உருவாக்கிய கைவினைஞர்களுக்கும் கிடைத்த மரியாதை; இரண்டு கின்னஸ் உலக சாதனை படைத்து இருப்பது, எங்கள் குடும்பத்திற்கும், 13 நாடுகளில் உள்ள எங்கள் குழுக்களுக்கும், பல ஆண்டுகளாக எங்களை நம்பி வரும் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் ஒரு பெருமைக்குரிய தருணம் என்று ஜோயாலுக்காஸ் ஜூவல்லரியின் தலைமை நிர்வாக அதிகாரி ஜான் பால் அலுக்காஸ் தெரிவித்தார்.

Source link