16 மாதங்களில் 36 மரண தண்டனைகளை வழங்கிய அதிரடி நீதிபதி இடமாற்றம்

– நமது சிறப்பு நிருபர்-

உத்தரப்பிரதேச மாநிலத்தின் முசாபர்நகர் கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்ற நீதிபதியாக ரவிக் குமார் திவாகர் பணியாற்றி வந்தார். இவர் 2009ம் ஆண்டில் உத்தரப் பிரதேச நீதித்துறையில் இளநிலை சிவில் நீதிபதியாகப் பணியில் இணைந்தார். வணிகவியல், இளநிலைச் சட்டம் மற்றும் முதுநிலைச் சட்டப் பட்டங்களைப் பெற்றுள்ளார்.

தனது பதவிக்காலத்தில் முசாபர்நகரில் 11 வழக்குகளில் 23 பேருக்கும், அதற்கு முன்பு பரேலியில் 13 பேருக்கும் என மொத்தம் 36 பேருக்கு மரண தண்டனை விதித்து தேசிய அளவில் கவனத்தைப் பெற்றார். முசாபர்நகர் விரைவு நீதிமன்றத்தில் இவர் பணியாற்றியபோது, ஆகஸ்ட் 2026ல் இவரிடம் விசாரணையில் இருந்த கொலை உள்ளிட்ட 97 முக்கியக் குற்றவியல் வழக்குகள் நிர்வாக உத்தரவின் மூலம் மாவட்ட நீதிபதியால் திடீரென திரும்பப் பெறப்பட்டன.

விசாரணை துவங்கப்பட்ட வழக்குகளை இப்படி நிர்வாக உத்தரவு மூலம் மாற்ற முடியுமா என்று தனது தீர்ப்பு ஒன்றில் கேள்வி எழுப்பிய நீதிபதி திவாகர், குற்றவாளிகளுக்கு பயந்து நடுங்குவதை விட தமக்கு மரணமே மேல் என்றும் குறிப்பிட்டிருந்தார். தற்போது முசாபர்நகர் குடும்ப நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு உள்ளார். அவருக்குப் பதிலாக ஷிவ் குமாரி என்பவர் விரைவு நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

Source link