”தேர்தல் ஆணையத்தில் கட்சி பதிவு?”; டெல்லிக்கு தனுஷ் அவசர பயணம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தனுஷ் அரசியல் கட்சி தொடங்கப்போவதாக சமீப காலங்களில் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இதன் நீட்சியாக, சமீபத்தில் கோவையில் நடைபெற்ற விழாவில் தனுஷ் தனது ரசிகர் மன்றத்தை, நற்பணி மன்றமாக மாற்றினார். 

இதையடுத்து, அவர் ’தமிழக எழுச்சி கழகம்’ என்ற கட்சியைத் தொடங்க இருப்பதாக சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இது அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியிருந்தது.  

இந்நிலையில், நடிகர் தனுஷ் நேற்று (19-10-26) அவசரமாக டெல்லிக்குப் பயணம் மேற்கொண்டது தமிழக அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் தனது புதிய அரசியல் கட்சியை இந்தியத் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யவே டெல்லி சென்றுள்ளதாக ஊடகங்களில் பரவலான தகவல்கள் வெளியாகி வருகின்றன.  

அதே நேரத்தில், டெல்லியில் முகாமிட்டுள்ள தனுஷ், அங்குள்ள சில முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் சட்ட வல்லுநர்களைச் சந்தித்து ஆலோசனை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.  

இதனிடையே, வாக்குச்சாவடி முகவர்களை நியமிப்பது மற்றும் தொகுதி வாரியாக உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்துவது போன்ற களப்பணிகளில் அவரது நற்பணி இயக்க மாநில, மாவட்ட நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதோடு, கிராமப்புற மற்றும் நகர்ப்புற வார்டு நிர்வாகிகளை நியமிக்கும் பணிகளும் விரைவில் நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.   

இதனிடையே, டெல்லி பயணத்தை முடித்துத் திரும்பியதும், தனுஷ் தனது நற்பணி மன்றத்தின் மகளிர் அணி நிர்வாகிகளைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின்றன.