தேவாலயத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து வி*பத்து : 3 பேர் உயிரி*ழப்பு!

வேலூர் மாவட்டம் மஞ்சு கிருஷ்ணாபுரம் என்ற இடத்தில் சி.எஸ்.ஐ. சீயோன் மலை சர்ச் நிர்வாகத்தின் சார்பில் போதகர் ஜோன்ஸ் கிருபாகர் என்பவரால் புதிதாகத் தேவாலயம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. அதன்படி தேவாலயத்தின் முதல் தளத்தை அமைப்பதற்காக ஏற்கனவே சென்டரிங் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, இரும்புக் கம்பிகள் கட்டப்பட்டிருந்தன. அதனைத் தொடர்ந்து, கான்கிரீட் அமைக்கும் பணிகளைத் தொடங்குவதற்காகத் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது பலகைகளைத் தாங்கி நிற்பதற்காக அமைக்கப்பட்டிருந்த முட்டுகள் இன்று (10.09.2026) மாலை 6 மணியளவில் எதிர்பாராத விதமாக, சரிந்து விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், மேலிருந்த கட்டுமான பொருட்கள் மற்றும் மரக்கட்டைகள் சரிந்து விழுந்ததில் தொழிலாளர்கள் சிலர் இடிபாடுகளுக்குள் சிக்கியதாகத் தகவல் வெளியாகியிருந்தது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புப் படையினர், இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த ஒருவரைப் பத்திரமாக மீட்டனர். 

அதே சமயம், இந்த விபத்தில் 3 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புதிதாகக் கட்டப்பட்டு வரும் தேவாலயத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் மூன்று தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும்  ஏற்படுத்தியுள்ளது. 

Source link