”தேவைப்பட்டால் டெல்லி சென்று போராட்டத்தில் கலந்துகொள்வேன்”

மேற்கு வாங்க மாநிலத்தில் இன்று (21-07-26) திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சார்பில் தியாகிகள் தினம் கொண்டாடப்பட்டது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மிகப் பெரும் தோல்வியைச் சந்தித்தது. இதனால், கட்சியில் இருந்து ஏராளமான சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் கட்சியிலிருந்து விலகிச் சென்றுவிட்டனர். 

இந்நிலையில், இந்த தியாகிகள் தின மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி, ”மேற்குவங்கத்தில் பாஜகவை எதிர்த்துப் போராட இந்தியக் கூட்டணியின் கீழ் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என நான் விரும்புகிறேன். இதில் எனக்கு எந்த ஈகோவும் இல்லை. மற்றவர்களும் தங்களது கருத்து வேறுபாட்டை ஒதுக்கிவிட்டு ஒன்றிணைந்து போராட முன் வர வேண்டும். 

கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தும் துரோகிகள் எப்போது கட்சியில் சேர்த்துக்கொள்ளப் பட மாட்டார்கள். அவர்களுக்குத் தைரியம் இருந்தால் பாஜகவில் சேர்ந்து தேர்தலைச் சந்திக்கலாம். பாஜகவுடன் இணைந்து துரோக செயலில் ஈடுபட நினைப்பவர்கள் தங்களது எண்ணங்களைக் கைவிடுங்கள். கட்சியை விட்டு வெளியேற நினைப்பவர்கள் இப்போதே தாராளமாக வெளியேறலாம். அந்த இடங்களை நிரப்ப எமது இளம் தலைமுறையினர் மற்றும் மாணவர்கள் தயாராக உள்ளனர்.   

டெல்லியில் கல்வித்துறையில் நிலவும் முறைகேடுகளுக்கு எதிராகவும் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் போராடி வருகின்றனர். தேவைப்பட்டால்  நானும் டெல்லி சென்று போராட்டத்தில் கலந்துகொள்வேன்” என்று பேசினார்.  

Source link