த.வெ.க ஆட்சியில் இரு மடங்கான மின் கட்டணம்? மக்கள் வேதனை; தலைமை பொறியாளர் சொன்னது இதுதான்

தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு மின் நுகர்வோருக்கு அதிக மின் கட்டணம் வந்திருப்பதாக பல புகார்கள் எழுந்துள்ளது. அதாவது, தி.மு.க ஆட்சியில் மின் கட்டணம் குறைவாக இருந்ததாகவும். த.வெ.க ஆட்சியில் அதே மின் கட்டணம் இரு மடங்கு அதிகரித்ததாகவும் பல புகார்கள் எழுந்தது. 

13 ஆண்டுகளாக தொடரும் அநீதி: தகுதித் தேர்வில் வென்ற 410 பேருக்கு ஆசிரியர் பணி வழங்குக – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

தேர்தல் வாக்குறுதியாக வீட்டு மின் பயன்பாட்டு நுகர்வோருக்கு மாத அடிப்படையில் மின் கட்டண கணக்கீடு மற்றும் 200 யூனிட் இலவச மின்சாரம் என த.வெ.க அறிவித்திருந்த நிலையில், முதலமைச்சர் விஜய், 500 யூனிட் கீழ் பயன்படுத்தப்படும் வீடுகளுக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசம் என கையெழுத்திட்டார். இது பெரும் விமர்சனத்திற்குள்ளான நிலையில், பழையப்படி இரண்டு மாதத்திற்கு ஒரு முறை மின் கணக்கீடு செய்வதும் மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், பலரும் தங்களது வீட்டு மின் கட்டணங்கள் கடுமையாக உயர்ந்திருப்பதாக அதிப்தி தெரிவித்தனர். 200 யூனிட் இலவச மின்சாரம் அறிவித்துவிட்டு, மின் கட்டணத்தை அரசு அமைதியாக உயர்த்திவிட்டதாக அரசியல் கட்சிகள் குற்றச்சாட்டை முன் வைத்தது. இந்நிலையில், மின் கட்டணம் அதிகரித்திருப்பது குறித்து தமிழ்நாடு மின்வாரிய நெல்லை மண்டல தலைமை பொறியாளர் விளக்கம் கொடுத்துள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், ”மின்சார துறையின் சில பிரிவுகளில் நடைபெறும் அசாதாரணமான பில்லிங் முறையால் பொதுமக்களுக்கு நிதியிழப்பு ஏற்பட்டுள்ளது. மீட்டர் கணக்கீடு, பில்லிங் செயல்முறையில் குறைபாடுகளால் சில இடங்களில் தவறான மற்றும் அதிக கட்டணம் பதிவாகியுள்ளது. 

பழுதடைந்த மீட்டரின் மின்அளவுகளில் இருக்கும் பிரச்சனை தொடக்க நிலையிலேயே கண்டறியப்படவில்லை. இதனால் தான் மீட்டர்கள் மற்றும் பில்லிங் செயல்முறைகளில் குறைபாடுகள் ஏற்பட்டது. களஆய்வு அதிகாரிகள் தங்களின் கடமைகளை முறையாக செய்திருந்தால் பிரச்சனைகளை தவிர்த்திருக்க முடியும். மேலும், ஒவ்வொரு காலமுறைப்படி திடீர் ஆய்வு மேற்கொள்ள மேற்பார்வை பொறியாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது” என்றார்.

Source link