த.வெ.க. உறுப்பினர்கள், எடப்பாடி பழனிசாமியை பாராட்டி பேசிய சபாநாயகர்

தமிழ்நாடு சட்டசபையில் சர்காரியா அறிக்கை குறித்து நேற்று முதலமைச்சர் விஜய் பேசியது குறித்து அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று தி.மு.க. தரப்பில் இன்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தனது தீர்ப்பை கூறினார். அதில், முதலமைச்சரின் பதிலுரையில் குறிப்பிட்ட எதையும் அவைக்குறிப்பில் இருந்து தேவையில்லை, நீக்க முடியாது என்றார். இதையடுத்து சட்டசபையில் சபாநாயகரின் இருக்கையை முற்றுகையிட்டு தி.மு.க. உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

இதனால் தி.மு.க. உறுப்பினர்களை வெளியேற்றுமாறு அவைக்காவலர்களுக்கு சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் உத்தரவிட்டார். இதையடுத்து அவைக்காவலர்கள் தி.மு.க. உறுப்பினர்களை வெளியேற்றினர்.

இதன்பின், சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் பேசியதாவது:-

* திமுகவினர் பேசுவதற்கு அனுமதி கொடுப்பது தான் நான் செய்த தவறா?

* சபையை நடத்தவிடாமல் தடுக்க வேண்டும் என திமுகவினருக்கு உள்நோக்கம் உள்ளது.

* அவையின் மாண்பு தான் முக்கியம், திமுகவினரை வெளியேற்றியதை தவறாக கருதவில்லை.

* பிற்பகல் 1.30 மணிக்குள்ளாக சட்டசபையை முடிக்க வேண்டும்.

* அவையை முடிக்கவிடாமல் திமுகவினர் தடுத்தால் நான் என்ன செய்ய முடியும்?

* முதலமைச்சர் பேச்சை அவை குறிப்பில் இருந்து நீக்க முடியாது என்பதற்கு காரணத்தையும் கூறி விட்டேன்.

* தவெக எம்எல்ஏக்கள் அமைதி காத்தது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது.

* என்னதான் நடக்கும் நடக்கட்டுமே என பார்த்துக்கொண்டிருந்தார் எடப்பாடி பழனிசாமி என்றார்.

Source link