நடிகர் டைகர் ஷெராப் மீது துப்பாக்கிச் சூடு! அதிர்ச்சியில் உறைந்த பாலிவுட்..!

இந்த தாக்குதலுக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலை சேர்ந்த அனில் பண்டிட் மற்றும் ஹர்மன் சந்து ஆகியோர் பொறுப்பேற்றுள்ளனர். இவர்கள் தங்கள் முகநூல் பதிவில்

“சல்மான் கானுடன் யாரும் பணியாற்ற கூடாது என்று நாங்கள் எச்சரித்தும் மீறியதால் டைகர் ஷெராப்பை தாங்கள் குறி வைத்ததாக தெரிவித்துள்ளனர். எங்கள் பேச்சைக் கேட்காதவர்கள் அடுத்ததாக பாதிக்கப்படுவார்கள், பொறுத்திருந்து பாருங்கள்,” என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

லாரன்ஸ் கும்பல் முன்பே சல்மான் கானை குறிவைத்து தொடர் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் சல்மான் கானின் நெருங்கிய நண்பர் மற்றும் முன்னாள் மந்திரி பாபா சித்திக்கை துப்பாக்கி சுட்டு கொலை செய்தனர். இந்த சம்பவம் உலகம் முழுக்க மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. டைகர் மீதான துப்பாக்கி சூட்டில் அவருக்கு காயம் எதுவும் இல்லை என்று டிசிபி மோஹித் கார்க் உறுதிப்படுத்தினார்.

துப்பாக்கி சூடு நடைபெற்ற பகுதியை காவல்துறையினர் சுற்றி வளைத்து ஆய்வு செய்து வருகின்றனர்.இது குறித்து மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் மும்பை காவல் ஆணையரை தொடர்பு கொண்டு , குற்றவாளிகளின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

Source link