நடிகர் தனுஷ் குறித்த கேள்வி – அமைச்சர் மரிய வில்சன் பரபரப்பு பேட்டி!

சென்னையில் தமிழக நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் இன்று (23.10.2026) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார். அப்போது, நடிகர் தனுஷ் அரசியலுக்கு வருவது குறித்த கேள்விக்குப் பதிலளித்துப் பேசிய அவர், “தலைவர் விஜய்க்கு நடிகர் தனுஷ் போட்டி என்பதற்கெல்லாம் வாய்ப்பே கிடையாது. நீங்கள் அந்தக் கேள்வியைத் திரும்பப் பெற்றுக்கொள்ளுங்கள். முதலமைச்சர் விஜய் மட்டும்தான் ஒரே தலைவர்.

50 ஆண்டுகளாக ஆட்சி செய்த இரண்டு கட்சிகளுக்கும் சேர்த்து, தமிழக மக்கள் ஒரு நல்ல பாடத்தைக் கொடுத்திருக்கிறார்கள். மிகச் சிறந்த தீர்ப்பைத் தமிழக மக்கள் வழங்கியிருக்கிறார்கள். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியல் கட்சி ஆரம்பிக்கலாம்; யார் வேண்டுமானாலும் தேர்தலில் போட்டியிடலாம். ஆனால், அது அவர்களுடைய முடிவு. அவர் இப்போதுதான் அரசியலில் தொடங்குகிறார். நான் ஏற்கெனவே சொன்னதுபோல, அவர் எனக்கு நன்றாகத் தெரியும். எனக்கு மிகவும் நெருக்கமானவர். ஆனால், அவர் ஒரு முடிவை எடுத்திருக்கிறார். அந்த முடிவு சரியானதா, தவறானதா என்பது வருங்காலத்தில்தான் தெரியும். 

தனுஷ் ராசி என்று சொல்வார்களே, அதைப் பார்த்தீர்களா? தனுஷ் எதைச் சொல்கிறீர்கள்? அதையெல்லாம் வைத்து அவர்கள் கணக்குப் போட்டுக்கொள்ள வேண்டியதுதான். அவர்கள் நிறைய கணக்கீடுகளைப் போட்டுப் பார்த்துவிட்டார்கள். கடந்த 2026 தேர்தலில் எவ்வளவு பெரிய கணக்கீடுகள் செய்தார்கள்? இரு தரப்பிலும் எவ்வளவு பெரிய கூட்டணிகள் அமைக்கப்பட்டன? ஆனால், அதையெல்லாம் தாண்டி மக்கள் தெளிவான தீர்ப்பை வழங்கியிருக்கிறார்கள். இப்போது இதேபோல இன்னொரு கணக்கீட்டைப் போட்டுப் பார்க்கலாம்; இன்னொரு நட்சத்திரம் வருகிறார், அவரை வைத்து ஒரு திருப்புமுனை ஏற்படும் என்று அவர்கள் நம்புகிறார்கள். ஆனால், திருப்புமுனை எதுவும் இருக்காது; ஏமாற்றம்தான் இருக்கும்.

ரஜினியின் நிலைப்பாட்டை 1991-லும் பார்த்திருக்கிறேன். 1993, 1994 காலகட்டங்களிலும் பார்த்திருக்கிறேன். 1996 மக்களவைத் தேர்தலையும் பார்த்திருக்கிறேன். எல்லாக் காலகட்டங்களையும் நான் பார்த்திருக்கிறேன். இதற்கெல்லாம் காலம்தான் பதில் சொல்லும். காலம் ஏற்கெனவே அவர்களுக்குப் பதில் சொல்லிவிட்டது. இந்த விவகாரத்தில் ரஜினி பிரச்சாரம் செய்வாரா, மாட்டாரா என்பதையெல்லாம் அவரிடமே விட்டுவிடுவோம். ஆனால், ஏற்கெனவே வரலாறு இருக்கிறது அல்லவா? 1991-ஐப் பார்த்துவிட்டோம்; 1996-ஐப் பார்த்துவிட்டோம். அதன்பிறகு 1999 மக்களவைத் தேர்தலையும் பார்த்திருக்கிறோம். 

யார் யாருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தார்கள், யாரை எவ்வளவு தூரம் மக்களிடம் கொண்டு சென்றார்கள் என்பதையும் பார்த்திருக்கிறோம். 2026-இல் அவர்ட்வீட் போட்டார். அதற்கு என்ன நடந்தது என்பதும் தெரியும். எனவே, இதற்கெல்லாம் தமிழக மக்கள் ஏற்கெனவே முழுமையான தீர்ப்பைக் கொடுத்துவிட்டார்கள். அதனால், யார் பிரச்சாரம் செய்தால் என்ன? அதற்கெல்லாம் இன்னும் காலம் இருக்கிறது” எனத் தெரிவித்தார்.