சென்னை மாநகராட்சியில் சுமார் 625 மின்சார பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு மின்சார பேருந்தும் குறைந்தபட்சம் 200 கிலோ மீட்டர் வரை சென்னைக்குள் இயக்கப்பட வேண்டும் என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் தான் அரசு மற்றும் தனியார் கூட்டாக இந்த மின்சார பேருந்துகளை இயக்கி வருகின்றனர்.
ஒரு பக்கம் வெயில் கொளுத்துகிறது… இன்னொரு பக்கம் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் எகிறுது; ஐரோப்பால என்ன தான் நடக்குது?
அசோக் லேலாண்ட் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஓம் நிறுவனம் தான் இந்த தனியார் மின்சார பேருந்துகளை இயக்கி வருகிறது. இந்த நிலையில், மின்சார பேருந்துகளில் அடிக்கடி பழுது ஏற்படுகிறது, நடுவழியில் சில பேருந்துகள் பழுதாகி நிற்கின்றன. இதன் காரணமாக ஒவ்வொரு நாளும் குறிப்பிடப்பட்ட தூரமான 200 கி.மீ தூரத்தை எட்ட முடியாத சில மின்சார பேருந்துகள் இருக்கின்றன.
கடந்த மார்ச் மாதத்துடன் முடிந்த நிதியாண்டில் மொத்தமாக 9 கோடி ரூபாயை தமிழக அரசுக்கு ஒப்பந்த நிறுவனங்கள் அபராதமாக கட்டியுள்ளது. அதுமட்டும் அல்லாமல் தனியார் மின்சார பேருந்துகளை இயக்கும் அந்த நிறுவனத்திற்கு கடந்த மார்ச் மாதம் வரை ரூ.80 கோடியே 60 லட்சத்தை பேருந்தை இயக்கியதற்காக தமிக அரசு வழங்கியுள்ளது.
இனி வரும் காலங்களில் கூடுதலாக மின்சார பேருந்துகளை கொள்முதல் செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தி உள்ளதால் தற்போது சென்னையில் இருக்கும் 600-க்கும் மேற்பட்ட மின்சார பேருந்துகளின் எண்ணிக்கை மேலும் உயரப் போகிறது. அவ்வாறு புதிய மின்சார பேருந்துகளை கொள்முதல் செய்யும் பொழுது தற்போது உள்ள ஒற்றை நிறுவனத்திற்கு மாற்றாக புதிய நிறுவனங்களுக்கு வாய்ப்பு அளிப்பதற்கு போக்குவரத்துறை முடிவு செய்துள்ளது.
