முதல்வர் விஜய்யிடம் புகார்களை அடுக்கிய மாணவர்கள்; வெளியான அதிரடி உத்தரவு!

தமிழக முதல்வர் விஜய், நிர்வாகம் சார்ந்து பல்வேறு பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். சில தினங்களுக்கு முன்பு சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் முதல்வர் விஜய் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அந்த மருத்துவமனையில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் சரியாக இல்லை என மூதாட்டி ஒருவர் சமூக வலைத்தள பக்கத்தில் புகார் அளித்திருந்ததை தொடர்ந்து முதல்வர் விஜய், அந்த மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த சூழலில், தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வரும் சமூகநீதி விடுதிகளில் உணவு தரமாக இல்லை என புகார்கள் தொடர்ந்த வந்த வண்ணம் இருந்தது. அந்த புகாரைத் தொடர்ந்து, சென்னை சென்னை சைதாப்பேட்டையில் உள்ள எம்.சி.ராஜா சமூகநீதி விடுதியில் முதல்வர் விஜய் நேற்று (17-07-26) திடீர் ஆய்வு மேற்கொண்டார். அதில் சமூகநீதித் துறை அமைச்சர் வன்னி அரசு, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் ஆகியோர் முதல்வர் விஜயுடன் இருந்தனர்.

இந்த ஆய்வின் போது அந்த விடுதியில் தங்கி பயிலும் மாணவர்கள் முதல்வர் விஜயிடம், உணவில் பூச்சி, வண்டுகள் இருப்பதாகவும், ஊழியர்கள் மற்றும் வார்டன் தங்களை இழிவாக பேசுவதாகவும் இதனால் அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர் என்றும் புகார்கள் பட்டியலிட்டனர். அனைத்து புகார்களை கேட்ட முதல்வர் விஜய், விடுதி காப்பாளரை விசாரித்தார். அதன் பின்னர் அனைத்து குறைகளையும் சீர் செய்து தரப்படும் என மாணவர்களிடம் முதல்வர் விஜய் உறுதியளித்தார்.

இந்த நிலையில், சென்னை சைதாப்பேட்டை எம்.சி.ராஜா சமூகநீதி விடுதி மாணவர்களின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என அதிகாரிகளுக்கு சமூகநீதித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Source link