சென்னை: நாங்கள் 1 ரூபாய் கூட தொடமாட்டோம், தொடவும் விடமாட்டோம், தொட்டவர்களையும் விடமாட்டோம் என திமுகவின் நேரு வீட்டில் ரெய்டு குறித்து அமைச்சர் ராஜ்மோகன் பதில் அளித்துள்ளார்.
சென்னையில் நிருபர்களிடம் அமைச்சர் ராஜ்மோகன் அளித்த பதில்: ஆற்றல் மிக்க அற்புதமான மனிதர் அண்ணன் அஜித்; எங்கள் முதல்வர் மீது நம்பிக்கை வைத்து வாழ்த்துச் சொன்ன அவருக்கு நன்றி. அவர் ஆசைப்பட்டபடி விளையாட்டுத்துறை உட்பட அனைத்து துறைகளிலும் பல்வேறு முன்னேற்றங்களை முதல்வர் ஏற்படுத்துவார்.
பள்ளிக்கூடம் படிக்கும் குழந்தைகள் முதல் வயதானவர்கள், பெண்கள், ஆண்கள் வரை அனைவரையும் எப்பொழுது 9.30 மணி ஆகும் என்று காக்க கூடிய சூழலை நாங்கள் ஏற்படுத்தி இருக்கிறோம். இதனை வரவேற்க வேண்டும்.
சட்டசபை நிகழ்வுகள் ஜனநாயக பூர்வமாக நடக்கிறது. முந்தைய காலத்தில் சினிமா வசனங்கள், பஞ்ச் டயலாக் பேசி கொண்டு இருந்த வீடுகளில் இன்று சட்சபை நிகழ்வுகள் நேரலை நாயகன் முதல்வர் விஜய் வாயிலாக சென்று சேர்ந்து இருக்கிறது. ஒரு தலைமுறையையே எங்கள் தலைவர் மாற்றிக் கொண்டு இருக்கிறார்.
