நாட்டின் இனிப்பு மற்றும் கார வகைகள் சந்தை மதிப்பு; ரூ.1.5 லட்சம் கோடி ஏற்றுமதியும் 10 சதவீதம் அதிகரிப்பு

ஹைதராபாத்: நாட்டின் இனிப்பு மற்றும் கார வகைகளின் சந்தை மதிப்பு கிட்டத்தட்ட 1.5 லட்சம் கோடி ரூபாயாக உள்ளதாகவும், ஏற்றுமதி ஆண்டுக்காண்டு 10 சதவீதம் அதிகரித்து வருவதாகவும், இனிப்பு மற்றும் கார வகைகள் உற்பத்தியாளர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் இனிப்பு மற்றும் கார வகை கள் உற்பத்தி தொழிலில் ஈடுபட்டுள்ளோருக்கான கண்காட்சி ஜூலை 16 முதல் 18ம் தேதி வரை நடைபெற்றது. இது குறித்து கூட்டமைப்பினர் தெரிவித்துள்ள தாவது:

இனிப்பு மற்றும் கார வகைகளுக்கு நிலையான சந்தை வாய்ப்பு இருந்து வருகிறது. இதன் சந்தை மதிப்பு கிட்டத்தட்ட 1.5 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இந்தியாவை கடந்து வெளிநாடுகளிலும் இந்திய இனிப்பு மற்றும் கார வகைகளுக்கு வரவேற்பு அதிகரித்து வருகிறது.

ஆரம்பத்தில் நம் நாட்டின் இனிப்புகளுக்கு பெரிய வரவேற்பு இல்லை. குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் சாக்லேட் சார்ந்த இனிப்பு வகைகளே கோலோச்சி கொண்டிருந்தன.

தற்போது நம் நாட்டின் குலோப் ஜாமூன், ரசகுல்லா, சோன் பப்டி, மைசூர் பாக் உள்ளிட்டவை வரவேற்பு பெற்று வருகிறது. தென் கிழக்கு ஆசிய நாடுகளும் நம் நாட்டின் இனிப்புகளை விரும்புகிறது. இனிப்பு, கார வகைகளின் ஏற்றுமதி ஆண்டுக்கு 10 சதவீதம் அதிகரித்து வருகிறது.

இவ்வா று தெரிவித்து உள்ளனர்.

Source link