முஸ்லிம்கள் இட ஒதுக்கீடு 5 சதவீதமாக உயரும்

முஸ்லிம்களுக்கு மூன்றரை சதவீத இட ஒதுக்கீட்டை, முன்னாள் முதல்வர் கருணாநிதி வழங்கினார். இதை, ஐந்து சதவீதமாக உயர்த்துமாறு, முதல்வர் விஜயை சந்தித்து வலியுறுத்தினோம். அவர், ‘மக்கள் தொகை கணக்கு எடுப்புக்குப் பின், முடிவு எடுக்கப்படும்’ என, தெரிவித்துள்ளார்.

கடந்த 2024ல், தமிழக அரசு வழங்கிய அரசாணை தொடர்பான வழக்கில், ‘முஸ்லிம்களில் ஏழு பிரிவினருக்கு மட்டுமே, இட ஒதுக்கீடு வழங்கப்படும்’ என, நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது குறித்து மேல் முறையீடு செய்வதா, புதிதாக அரசாணை பிறப்பிப்பதா அல்லது சட்டத்திருத்தம் ஏதேனும் செய்வதா என, ஆலோசித்து வருகிறோம்.

விரைவில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் பரிந்துரையை, முதல்வரிடம் வழங்க உள்ளோம். நிதிநிலை அறிக்கையில், சிறுபான்மையின மக்களுக்கு, மகிழ்ச்சியான அறிவிப்புகள் வரும்.

— ஷாஜகான் தமிழக அமைச்சர், முஸ்லிம் லீக் கட்சி

Source link