நாதக வேட்பாளர் கைது – உதயநிதி கண்டனம்

தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்ட எம். கார்த்திகா, கோவையில் வைத்துத் தாராபுரம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்

அக்டோபர் 4-ம் தேதி, தாராபுரத்தில் தேர்தல் பரப்புரைக்குத் தடை விதிக்கப்பட்டதைக் கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டது. இடைத்தேர்தல் சமயத்தில் காவல் நிலையத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தியது.முதலமைச்சரின் ரோடு ஷோ நடந்த சாலையில் மறியலில் ஈடுபட்டது உள்ளிட்ட புகார்களின் பேரில் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரின் கைது நடவடிக்கைக்கு எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனங்களை தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் தனது சமூகவலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது

தாராபுரம் இடைத்தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கார்த்திகாவை இந்த Circus அரசாங்கம் கைது செய்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

தேர்தல் நேரத்தில் பதியப்பட்ட வழக்கின் அடிப்படையில், அரசியல் பழிவாங்கலோடும் த.வெ.க.வினரின் போதைப்பொருள் கடத்தல் செய்திகளை திசைத்திருப்பவும் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அரசியலில் விமர்சனங்களும் – ஜனநாயக ரீதியான போராட்டங்களும் தவிர்க்க முடியாதவை. அதற்காக எதிர் வரிசையில் உள்ள ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை கைது செய்வது என்பது கடைந்தெடுத்த பாசிசம்.

இந்த ரீல்ஸ் முதலமைச்சர், பா.ஜ.க-வின் Carbon Copy-ஆக செயல்படாமல், சகோதரி கார்த்திகாவை விடுவிக்கத் தேவையான நடவடிக்கையை செய்ய வேண்டும்.

என்று தெரிவித்துள்ளார்.

Source link