"நான் என் அடையாளத்தை இழந்துவிட்டதுபோல் உணர்ந்தேன்" – சமந்தா

நடிகை சமந்தா சமீபத்தில் ‘The Hollywood Reporter’ ஆங்கில ஊடகத்திற்கு பேட்டி அளித்திருக்கிறார்.

மயோடிஸ் நோயால் பாதிக்கப்பட்டது குறித்து அந்த நேர்காணலில் பேசியிருக்கும் சமந்தா, “மயோடிஸ் நோயால் நான் பாதிக்கப்பட்டிருந்தப்போது என் அடையாளத்தை நான் இழந்துவிட்டதுபோல் உணர்ந்தேன்.

எனது கட்டுப்பாட்டில் எதுவுமே இல்லை என்ற எண்ணம் எனக்கு தோன்றியது. மன உறுதி, நம்பிக்கை, எதிர்பார்ப்பு போன்ற முக்கியமானக் குணங்களை இந்த நோய் எனக்கு கற்றுக்கொடுத்தது.

சமந்தா
சமந்தா

இதனால் என் வாழ்க்கை இன்னும் மேம்பட்டிருக்கிறது. இந்த நோய் எனக்கு வராமல் இருந்திருக்கலாம் என்று நான் நினைத்திருக்கிறேன். ஆனால் இது எனக்குக் கற்றுக்கொடுத்த பாடங்கள் என் வாழ்க்கையின் விலைமதிப்பற்ற அங்கமாக மாறிவிட்டன.

‘ஏன் எனக்கு மட்டும் இப்படி நடக்க வேண்டும்?’ என்ற கட்டத்தை நான் கடந்து, ‘இதிலிருந்து நான் கற்றுக்கொள்ள ஏதோ இருக்கிறது’ என்ற தெளிவை அடைய எனக்குச் சிறிது காலம் எடுத்துக்கொண்டது” என்று பகிர்ந்திருக்கிறார்.

Source link