’நீட்’டால் தொடரும் உயிர் இழப்பு; 19 வயது மாணவியின் விபரீத முடிவு

நீட் தேர்வு முறை தொடங்கப்பட்ட காலம் முதல் தொட்டே பல்வேறு மாணவர்கள் உயிர் இழந்து வரும் சம்பவம் தொடர்ந்து வருகிறது. அந்த வகையில், தற்போது மீண்டும் ஒரு மாணவி உயிர் இழந்துள்ளார். மராட்டிய மாநிலம், அகல்யா நகர் மாவட்டம், கர்ஜத் தாலுகா ஜலால்பூர் கிராமத்தில் மாணவி அங்கிதா சுரேஷ் சங்கல (19) தற்கொலை செய்து கொண்ட சம்பவம்,  அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

இவர் கடந்த சனிக்கிழமை (25-07-26) அவர் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து, தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, சடலத்தின் அருகே ஒரு கடிதம் கண்டெடுக்கப்பட்டது.   

அதில், நீட் தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காததால் மன அழுத்தம் அதிகமானதாலும், அதனால் தனது மருத்துவர் கனவு நிறைவேறாமல் போனதாலும் இந்த முடிவை எடுப்பதாகத் தெரிவித்துள்ளார். மேலும், இதில்  தனது பெற்றோர் மற்றும் சகோதரர் மீது எந்த குற்றமும் இல்லை என்றும் தெரிவித்திருந்தார்.   

நடந்து முடிந்த தேர்வில் அவரது பிரிவிற்குத் தேவையான கட்-ஆஃப் 177 மதிப்பெண்ணுக்கு 11 மதிப்பெண்கள் குறைவாக எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.   

Source link