நீட் எதிர்புக்கான போராட்டம்; மாணவர்களுக்கு வேண்டுகோள் வைத்த வெற்றிமாறன்!

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர், மாணவர்கள், இளைஞர்கள் போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களில் இளைஞர்கள் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில், சென்னை தி. நகரில் இந்திய கம்யூனிஸ்ட் அலுவலகமான பாலன் இல்லத்தில் நடந்த போராட்டத்தில் இயக்குநர் வெற்றிமாறன் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, “இளைஞர்களின் எழுச்சி மற்றும் ஒற்றுமை எங்களுக்கு பெரிய ஊக்கமாக இருக்கிறது. மாணவர்கள் முன்னெடுக்கும் எந்த போராட்டமும் தோற்காது. நாங்கள் எப்போதும் உங்களுடன் இருக்கிறோம். இது உங்கள் போராட்டம். யாரையும் எடுத்து கொள்ள விட்டுவிடாதீர்கள். நீட்டை ரத்து செய்வதற்கு இந்த போராட்டம் தொடர்ந்து நடக்க வேண்டும். 

போராட்டம் என்பது நமது ஒவ்வொருவரின் உரிமை. அப்படி போராடாதீர்கள் என சொல்பவர்கள் மாணவர்களை அரசியமையமாக்கவோ கல்வி கற்க விடாதவர்களாகவோத் தான் இருக்கிறார்கள். நான் இங்கே வந்ததற்கு காரணம், என்னுடைய மகளும் அவருடைய தோழிகளும் கண்டிப்பாக வர வேண்டும் எனச் சொல்லிவிட்டார்கள். மாணவர்களின் ஒற்றுமை என்னைத் தலைவணங்க வைக்கிறது. நீட்டை தடை செய்யும் வரை போராடுவோம்” என்றார். 

Source link