நேபாளத்தில் மாயமான தமிழர்களை கண்டறிய டிஎன்ஏ பரிசோதனை: தமிழக அரசு முடிவு

சென்னை: நேபாள பெருவெள்ளத்தில் மாயமான தமிழர்களை கண்டறிய, அவர்களின் உறவினர்களுக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,200ஐ தாண்டி உள்ளது. 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை காணவில்லை. அங்கு சுகாதார நிலையை கருத்தில் கொண்டு இறந்தவர்களின் உடலை நேபாள அரசு அடக்கம் செய்து வருகிறது. அதற்கு முன்னர், அவர்களின் டிஎன்ஏ மாதிரிகளை சேகரித்து வைத்துள்ளது.

இந்த பெருவெள்ளத்தில் தமிழகத்தை சேர்ந்த 305 பேர் சிக்கினர். அவர்களில் 220 பேர் மீட்கப்பட்ட நிலையில் 85 பேரை காணவில்லை. அவர்கள் எங்கு உள்ளனர் என்ற தகவல் கிடைக்காமல் உள்ளது.

இந்நிலையில், அவர்களை அடையாளம் காண்பதற்காக, அவர்களின் உறவினர்களிடம் டிஎன்ஏ பரிசோதனை நடத்தப்பட உள்ளது. சென்னை, மதுரை, தஞ்சாவூர் மண்டலங்களில் உள்ள தடய அறிவியல் மையங்களில் பரிசோதனை செய்யவும், அந்த விவரங்களை நேபாளத்திற்கு அனுப்பி மாயமானவர்கள் குறித்த தகவல்களை பெறவும் தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.

Source link