நேபாள சுரங்கப்பாதையில் சிக்கியிருந்த இரண்டு தொழிலாளர்கள் மீட்பு; உறவினர்கள், குடும்பத்தினர் மகிழ்ச்சி

காத்மாண்டு: நேபாளத்தில் வெள்ளப்பெருக்கு காரணமாகச் சுரங்கப் பாதையில் சிக்கியிருந்த இரண்டு தொழிலாளர்கள் ஒன்பது நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

நேபாளத்தில் பெருவெள்ளம் ஏற்பட்டு 10 நாட்கள் ஆகிவிட்டது. இதுவரை 1200க்கு மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர். 5 ஆயிரம் பேரை காணவில்லை. அவர்களில், 6 நீர்மின் நிலையங்களில் பணியாற்றி வந்த 900க்கு மேற்பட்ட தொழிலாளர்களும் மாயமாகி உள்ளனர்.

தற்போது திடீர் வெள்ளம் ஏற்பட்டு 9 நாட்களுக்குப் பிறகு, நேபாள சுரங்கப்பாதையில் சிக்கியிருந்த இரண்டு தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர்; திரிசூலி 3A நீர்மின் திட்டத்தில் உள்ள ஒரு சுரங்கத்திலிருந்து ஒரு பணியாளர் பாதுகாப்பாக மீட்கப்பட்டதை எரிசக்தி துறை அமைச்சர் பிராஜ் பக்த ஸ்ரேஸ்தா உறுதிப்படுத்தினார்.

சிறிது நேரத்திற்குப் பிறகு இரண்டாவது பணியாளரும் மீட்கப்பட்டார். மீட்கப்பட்ட தொழிலாளர்கள் 45 வயதான கபீர் மஹர்ஜன் மற்றும் 30 வயதான சஞ்சய் சா என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களது உறவினர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Source link