‘நேபாள மக்களுக்கு வீடு கட்டித் தருவேன்’

நேபாள – திபெத் எல்லையில் பனிச்சரிவால் கோஷி ஆற்றில் ஏற்பட்ட பெருவெள்ளம் அந்நாட்டையே உலுக்கியுள்ளது. கடந்த ஆகஸ்ட் 26 அன்று ஏற்பட்ட இந்த பேரிடரில் பல ஆயிரம் பேர் சிக்கினர். இதில், 1100 க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளனர். மேலும், 4500க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். இந்த சம்பவம் அந்நாட்டு மக்களை நிலைகுலையச் செய்துள்ளது. கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாகப் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் நிவாரண உதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது.  

இந்த நிலையில் பாலிவுட் நடிகர் சோனு சூட் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் பார்வையிட்டு அம்மக்களுக்கு அறுதல் கூறி நிவாரண உதவிகளையும் வழங்கியுள்ளார். மேலும் அம்மக்களுடன் துணை நிற்பேன் எனவும் கூறியுள்ளார். இது தொடர்பாகா அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ திரிசூலி ஆற்றங்கரையில் நான் நிற்கிறேன். இங்கு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு கற்பனை செய்ய முடியாத இழப்புகளை சந்தித்துள்ளது. சிதைந்த வீடுகள், உடைந்த குடும்பங்கள் மற்றும் முற்றிலும் மாறிப்போன வாழ்க்கைகள் என அனைத்துமே நடந்துள்ளது. 

நேபாளம் தனித்துவிடப்படவில்லை. அந்நாட்டு மக்களுடன் நான் துணை நிற்கிறேன். நம்பிக்கைக் கொடுக்கவும், வீடுகளை மீண்டும் கட்டியெழுப்பவும், குடும்பங்கள் தங்கள் வாழ்க்கையை மீண்டும் தொடங்க உதவவும் என்னால் முயன்ற அனைத்தையும் செய்வேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். 



Source link