இங்கிருந்தே மற்ற கோவில்களுக்கும் பரவியது. தரைமட்டத்தில் இருந்து சுமார் 450 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த மலைக்கோவிலை அடைய பக்தர்கள் 690 படிக்கட்டுகளைக் கடந்து செல்ல வேண்டும். புராணக் காலங்களில் இத்தலம் ‘திருஆவினன்குடி’ என்றும் ‘தென்பொதிகை’ என்றும் அழைக்கப்பட்டு வந்தது.
பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில், வருடாந்திர பராமரிப்புப் பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து, வரும் செப்டம்பர் 12-ஆம் தேதி முதல் ரோப்கார் சேவை மீண்டும் தொடங்கப்பட உள்ளதாகக் கோவில் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
பழனி மலைக்கோவிலுக்கு செல்ல படிப்பாதை மற்றும் யானைப்பாதை பிரதான வழிகளாக அமைந்திருந்தாலும், பக்தர்கள் விரைவாகவும் மலையின் இயற்கை அழகை ரசித்தபடியும் செல்வதற்கு ரோப்கார் மற்றும் மின்இழுவை ரயில் (Winch) சேவைகள் பெருமளவில் பயன்படுகின்றன. இதில் ரோப்கார் பயணம் பக்தர்களுக்கு ஒரு சிறந்த சுற்றுலா அனுபவத்தையும் வழங்குவதால், பெரும்பாலானோர் இதையே தேர்வு செய்து வருகின்றனர்.
பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு, ரோப்கார் நிலையத்தில் ஆண்டுதோறும் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.
