பட்டப்பகலில் நடுரோட்டில் நபர் அடித்துக் கொலை.. மகாராஷ்டிராவில் பரபரப்பு சம்பவம்

Summary

மகாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜிநகரில் பட்டப்பகலில், ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட கொடூரம் அரங்கேறியுள்ளது.

மகாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜிநகரில் கரின் பரபரப்பான பகுதியான சிட்கோ, பஜ்ரங் சௌக் அருகே உள்ள பிரதான சாலையில் கொலையானது அரங்கேறியுள்ளது.

தாக்குதல்

தேவேஷ் என்ற பண்டி தீட்சித், நேற்று, உடற்பயிற்சிக் கூடத்திலிருந்து தனது ஸ்கூட்டரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது பவன் பராஷர் என்பவர் தனது காரால் ஸ்கூட்டர் மீது மோதினார்.

தீட்சித் ஸ்கூட்டரில் இருந்து சாலையில் தூக்கி வீசப்பட்டார். பின்னர் பராஷர் காரில் இருந்து வெளியே வந்து, ஹாக்கி மட்டை மற்றும் இரும்புக் கம்பியால் தீட்சித் தலை மற்றும் முகத்தில் தாக்கினார். இதில் தீட்சித் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பறிமுதல்

தாக்குதலுக்குப் பிறகு, காவல் நிலையத்திற்கு சென்று பராஷர் சரணடைந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தீட்சித் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட காரை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஹாக்கி மட்டை மற்றும் இரும்புக் கம்பியும் பறிமுதல் செய்யப்பட்டது.

விசாரணை

பராஷர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். இதனிடையே இந்த சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.

கொலைக்கான நோக்கம் குறித்து இன்னும் கண்டறியப்படவில்லை. வழக்கின் விவரங்களை வெளியிட காவல்துறை மறுத்துள்ளது.

இருப்பினும் தீட்சித்துக்கும் பராஷருக்கும் இடையே சிறிது காலமாக தகராறு இருந்து வந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொழில் பகையால் இந்த கொலை நடந்திருக்கலாம் என கருதப்படுகிறது.

Source link