பணத்தை விட தாய்நாடே பெரிது: ரூ.46 லட்சம் சம்பளத்தை உதறிவிட்டு ராணுவத்தில் இணைந்த இளைஞர்..!

மேலும் செப்டம்பர் 5-ம்தேதி நடைபெற்ற பாசிங் அவுட் பரேட் (Passing Out Parade) நிகழ்வுக்குப் பிறகு, அவர் அதிகாரப்பூர்வமாக இந்திய ராணுவத்தில் லெப்டினன்ட் (Lieutenant) அதிகாரியாக முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டார்.

இந்திய ராணுவத்தில் சேர்வதற்காக நடைபெற்ற தேர்வு செயல்முறைகளில் (SSB Interview) ஷர்தேந்து திவாரி 7 முறை தோல்வியடைந்த போதிலும், தனது 8-வது முயற்சியில் வெற்றிகரமாகத் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார். அவர் Technical Entry Scheme (Short Service Commission – Tech) மூலம் ராணுவத்தில் தேர்வு செய்யப்பட்டார். இதன் மூலம் தனது தொழில்நுட்ப அறிவை ராணுவப் பணியோடு இணைத்துப் பயன்படுத்தும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்.

ராணுவத்தில் சேர வேண்டும் என்ற தனது லட்சியத்திற்காக, அமேசான் (Amazon) நிறுவனத்தில் ஆண்டுக்கு ரூ.46 லட்சம் சம்பளத்தில் கிளவுட் இன்ஜினியராகப் பணியாற்றி வந்த அவர், அந்த ஆடம்பர வேலையையும், உலகப் புகழ்பெற்ற விண்வெளி மற்றும் பாதுகாப்புத் தயாரிப்பு நிறுவனமான ஏர்பஸ் (Airbus) நிறுவனத்தில் கிடைத்த பெரும் வேலை வாய்ப்பையும் நாட்டுக்காக நிராகரித்துள்ளார்.

Source link