பணம் பெற்றுக்கொண்டு ட்ரோல் செய்யும் தொழில்; நட்சத்திரங்களின் நற்பெயரை அழிக்க கோடிக்கணக்கான பணம் செலவிடப்படுவது எப்படி?

ஒரு இளம் முன்னணி திரைப்பட நடிகர் தனது விடுமுறையை அனுபவிக்கும் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்கிறார். அதேபோல், இளம் பெண் மாணவி ஒருவரும் தனது புகைப்படங்களைப் பகிர்கிறார். இருவரும் பகிர்ந்துள்ள புகைப்படங்களின் பின்னணி ஒரே மாதிரியாக இருப்பதைக் கவனித்த ரெட்டிட் (Reddit) பதிவு ஒன்று, அவர்கள் இருவரும் ஒன்றாக நேரத்தை செலவிடுகிறார்களா? என்று ஊகிக்கிறது.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்: 

இந்தத் தற்செயல் ஒற்றுமையை போட்டி நடிகர் ஒருவரின் பி.ஆர் (PR) நிறுவனம் கவனிக்கிறது. உடனடியாக அந்த நிறுவனம் தனது ஆன்லைன் பொதுமதிப்பு மேலாண்மை (Online Reputation Management- ORM) ஏஜென்சியைத் தொடர்புகொள்கிறது. இன்றைய காலகட்டத்தில் பிரபலங்களின் பி.ஆர் இயந்திரத்தின் முக்கிய அங்கமாக மாறிவிட்ட ஆன்லைன் பொதுமதிப்பு மேலாண்மை (Online Reputation Management (ORM) நிறுவனங்களின் பணி, வெறும் பரபரப்பை உருவாக்குவது அல்லது எதிர்மறையான செய்திகளை கட்டுப்படுத்துவது என்பதுடன் நின்றுவிடவில்லை. 

தற்போது மற்றொரு நடிகரின் புகழை வீழ்த்துவதும் அவற்றின் பொறுப்பாக மாறியுள்ளது. ஏனெனில், குறிப்பாக ஆன்லைன் உலகில் ஒருவரது புகழ் என்பது அவரது சொந்த செல்வாக்கை உயர்த்துவதில் மட்டும் இல்லை; மற்றவர்களின் புகழை சீர்குலைப்பதிலும் அது பயன்படுத்தப்படுகிறது. சிறிது நேரத்திலேயே ஆன்லைன் பொதுமதிப்பு மேலாண்மை நிறுவனம் தனது ட்ரோல் ஃபார்மை செயல்படுத்துகிறது. சமூக வலைதளங்களில் போலியான, தவறாக வழிநடத்தும் மற்றும் அவதூறான பதிவுகளை வெளியிட்டு, அவற்றை அதிக அளவில் பரப்புவதற்காக பணியமர்த்தப்பட்ட முகம் தெரியாத நபர்களைக் கொண்ட ஒருங்கிணைக்கப்பட்ட குழுவே ட்ரோல் ஃபார்ம் (‘troll farm’) எனப்படுகிறது. ஆனால், இந்தப் பதிவுகள் அனைத்தும் பொதுமக்களின் இயல்பான கருத்துகள் போலவே காட்டப்படுகின்றன.

ராமாயணா படத்தில் ரன்பீர் கபூர்

நடிகர் கார்த்திக் ஆர்யன் (Kartik Aaryan) வயது குறைந்த பெண்ணுடன் டேட்டிங் செய்கிறாரா?” என்று ஒரு ட்ரோல் பதிவு செய்கிறது. அதனுடன் அந்தப் பெண்ணின் சமூக வலைதள சுயவிவரமும் பகிரப்படுகிறது. அதில் அவரது வயது 17 என குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து, மற்றொரு எதிர்தரப்பு ட்ரோல் ஃபார்ம் களத்தில் இறங்கி, அந்தப் பெண்ணுக்கு உண்மையில் 18 வயது எனக் கூறுகிறது. இதற்கிடையில், அந்தப் பெண் தனது இன்ஸ்டாகிராம் பயோவில், தனக்கு கார்த்திக் ஆர்யனை தெரியாது என்று தெளிவுபடுத்துகிறார். ஆனால், அதற்குள் அந்த விவகாரம் மிகப்பெரிய சர்ச்சையாக உருவெடுத்துவிட்டது. 

இந்திய திரைப்படத் துறையில் தற்போது அதிகரித்து வரும் பிரபலங்களின் குழு செலவுகள் மற்றும் கார்ப்ரேட் பேங்கிங் (corporate booking) நடைமுறைகளைப் போலவே, இந்த வகையான திட்டமிட்ட ஆன்லைன் தாக்குதலும் மிகவும் ஆபத்தான ஒன்றாக மாறியுள்ளது.

திரைப்படத் துறையில் பெய்டு ட்ரோலிங் (Paid Trolling)-ன் தோற்றம்

இப்போது ஒவ்வொரு திரைப்படத்தின் பட்ஜெட்டிலும் இது ஒரு பகுதியாகிவிட்டது. நீங்கள் பணம் கொடுத்து ட்ரோலிங் செய்யாவிட்டாலும், உங்களுக்கு எதிராக ஒரு அவதூறு பிரச்சாரம் தொடங்கப்பட்டால் அதை சமாளிக்க குறைந்தபட்சம் ஒரு ஓ.ஆர்.எம் ஏஜென்சி தயாராக இருக்க வேண்டும். யாராவது உங்களுக்கு எதிராக திட்டமிட்டு அவதூறுப் பிரச்சாரம் நடத்தினால் என்ன செய்வது?” என்று பெயர் குறிப்பிட விரும்பாத அனுபவமிக்க பி.ஆர் நிபுணர் ஒருவர் ஸ்கிரீன் (SCREEN)-க்கு தெரிவித்துள்ளார்.

இது முற்றிலும் புதிய நடைமுறை அல்ல. முன்பு போட்டி நடிகர்களின் தரப்பினர், முன்னணி நாளிதழ்களில் இடம் வாங்கி, பெயர் குறிப்பிடாமல் ஏதாவது ஒரு தகவல் கசிந்ததாக செய்தி வெளியிடச் செய்வார்கள். அதற்கு எதிராக பாதிக்கப்பட்ட நடிகரின் தரப்பினர் மற்றொரு போட்டி நாளிதழில் விளக்கம் அளிப்பார்கள். ஆனால் சமூக வலைதளங்கள் வந்த பிறகு, இடப்பற்றாக்குறை என்ற பிரச்சினையே இல்லை. அதேபோல், யார் இதற்குப் பொறுப்பு என்பதும் தெளிவாகத் தெரியவில்லை. குறைந்தபட்சம் அந்தக் காலத்தில் ஒரு நல்ல ஆசிரியர், செய்தியாளரிடம் எதிர்தரப்பின் கருத்தையும் கேட்டுப் பதிவு செய்யச் சொல்வார். ஆனால் இப்போது சமூக வலைதளங்களில் இதை எப்படி முறையாகச் செயல்படுத்துவது?” என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

giva-ad
கிருதி சனோனின் ரக்ஷா பந்தன் விளம்பரம்

இந்த நிலை பாதுகாப்பாகவும், பாதுகாப்பின்மை உந்துசக்தியாகவும் மாறியுள்ள நிலையில், நடிகர்கள் திரைப்பட விழாக்களிலும் பார்ட்டிகளிலும் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்து, முத்தமிட்டுக் கொண்டாலும், சமூக வலைதளங்களில் ஒருவரை ஒருவர் வீழ்த்துவதற்காக தங்களது பி.ஆர் நிறுவனங்களுக்கு ஓய்வில்லாமல் வேலை கொடுத்து வருகின்றனர். திரைத்துறையில், ஒரு நடிகருக்கான பரபரப்பை உருவாக்குவதற்காக பெரும்பாலும் மற்றொரு நடிகரின் போட்டி முகாமே பணம் செலுத்துகிறது. உண்மையான ரசிகர்களின் கோபத்துக்கும், பணம் கொடுத்து உருவாக்கப்படும் கோபத்துக்கும் இடையிலான கோடு முற்றிலும் மறைந்துவிட்டது. 

இந்த வகையில் செயல்படும் பி.ஆர் நிறுவனங்களுக்கு எதிராக சட்டரீதியான பொறுப்பும் இல்லை. இது மிகவும் வருத்தமளிக்கும் விஷயம். ஆனால், அதுதான் உண்மை,” என்கிறார் ரெதிமா கபூர் (Riddhima Kapoor). இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு ஃபாபுல் லைவ்ஸ் பாலிவுட் வேவ்ஸ் (Fabulous Lives Vs Bollywood Wives) நிகழ்ச்சியின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அவரது சகோதரர் ரன்பீர் கபூரும் (Ranbir Kapoor) அடிக்கடி பணம் கொடுத்து நடத்தப்படும் ட்ரோலிங்கின் இலக்காகி வருவதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் ராமாயணா திரைப்படத்தின் டிரெய்லர் தொடர்பாகவும் அவர் ட்ரோலிங்கை எதிர்கொண்டதாக கூறப்படுகிறது. அவரது மனைவி ஆலியா பட்க்கும் இதே நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஆலியா பட் மிகப்பெரிய அளவில் ட்ரோலிங்கிற்கு இலக்காகியதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக ஷிவ் ரவாலி இயக்கிய ஸ்பை த்ரில்லர் திரைப்படமான ஆல்பா  படம் வெளியான பிறகு இந்த ட்ரோலிங் அதிகரித்ததாக கூறப்படுகிறது. எங்களால் கண்டறிய முடிந்த தகவல்களின் அடிப்படையில், இந்த ட்ரோலிங் மூன்று முன்னணி நடிகைகளின் பி.ஆர் ஏஜென்சிகளால் தொடங்கப்பட்டதாகத் தெரிகிறது. இந்த நடிகைகளுக்கு தங்களது பி.ஆர் குழுவினர் எந்த அளவுக்கு இதில் ஈடுபட்டுள்ளனர் என்பது உண்மையில் தெரியுமா என்பதை உறுதியாகக் கூற முடியாது. ஆனால், பெரும்பாலும் இதுபோன்ற வேலைகளைச் செய்வது அவர்களது பி.ஆர் இயந்திரம்தான்,” என்கிறார் அந்த திரைப்படத்தில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர் ஒருவர்.

அதே நேரத்தில், இது மூன்று அல்லது நான்கு தனித்தனி அவதூறு பிரச்சாரங்களின் கலவையாகவும் தெரிந்தது. ட்ரோல்கள் உருவாக்கிய கதையாடலிலிருந்தே அதை புரிந்துகொள்ள முடிந்தது. ஆலியா ஒரு ஆக்ஷன் ஹீரோயினாக போதுமான அளவு சிறப்பாக இல்லை’, ‘அவரை படத்தில் தேர்வு செய்தது சரியான முடிவு அல்ல’, ‘அவர் பார்ப்பதற்கு மிகவும் குட்டையாக இருக்கிறார்’ போன்ற கருத்துகள் திட்டமிட்டு பரப்பப்பட்டன,” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆலியா மட்டும் அல்ல; பல நடிகர்களும் ட்ரோலிங்கிற்கு இலக்கு

தொடர்ச்சியான பெய்டு ட்ரோலிங்கிற்க்கு இலக்காகி வரும் ஒரே நடிகை ஆலியா பட் அல்ல. திரைப்படப் படப்பிடிப்பு தளங்களில் 8 மணி நேர வேலை நேரம் இருக்க வேண்டும் என்று தீபிகா படுகோனே குரல் கொடுத்ததிலிருந்து, அவர் தொடர்ந்து ட்ரோலிங்கை எதிர்கொண்டுள்ளார். அதேபோல், கீர்த்தி சனோன் நடித்த சமீபத்திய ரக்ஷா பந்தன் விளம்பரமும் மிகப்பெரிய அளவில் எதிர்ப்பை உருவாக்கும் வகையில் பயன்படுத்தப்பட்டது. இதன் காரணமாக, அந்த விளம்பரத்தை வெளியிட்ட நிறுவனம் அதைத் திரும்பப் பெறும் நிலைக்குத் தள்ளப்பட்டது.

20241210035639_Laalsinghchaddha
லால் சிங் சத்தாவின் ஸ்டில் ஒன்றில் அமீர் கான் மற்றும் கரீனா கபூர் கான்.

இதில் கீர்த்தி சனோன் மறைமுகமாக எதிர்ப்பு தெரிவித்திருந்ததாகவும் கூறப்படுகிறது.
பொது வெளியில் இருந்து விலகி இருக்க நீங்கள் முடிவு செய்தாலும் பிரச்சினை முடிவதில்லை. கடந்த ஆண்டு தனது மகன் விஹான் கவுஷல் பிறந்த பிறகு கத்ரீனா கைப் பொதுவெளியில் அதிகமாகத் தோன்றாமல் இருந்தபோதிலும், அவரது உடல் எடை மற்றும் ஆடைத் தேர்வு குறித்து விமர்சிக்கும் ட்ரோல்கள் திடீரென சமூக வலைதளங்களில் தோன்றின. இதில் சில இயல்பான விமர்சனங்களாக இருக்கலாம். ஆனால் பெரும்பாலான நேரங்களில், குறிப்பிட்ட கீவேர்ட்ஸ் மற்றும் ப்ரீப் ஆகியவற்றை தங்களது ட்ரோல் ஃபார்ம்களுக்கு வழங்கி, ஓ.ஆர்.எம். ஏஜென்சிகளே அந்தக் கதையாடலை திட்டமிட்டு உருவாக்குவதாகக் கூறப்படுகிறது.

ஆண்களும் தப்பவில்லை

பெண்களுக்கு எதிரான ட்ரோலிங் மிகவும் மோசமானதாக இருந்தாலும், ஆண் நடிகர்களும் இதிலிருந்து தப்பவில்லை. இந்த ஆண்டின் தொடக்கத்தில் பார்டர் 2 படத்தின் இணைத் தயாரிப்பாளர் நதி தத்தா (Nidhi Dutta) வருண் தவான், (Varun Dhawan) ஆகியோருக்கு எதிராக தாக்குதல் நடத்திய பெய்டு ட்ரோலை தேச விரோதம் (“anti-national) என்று விமர்சித்தார். ராணுவ வீரரின் சீருடையில் வருண் தவான் வெளிப்படுத்திய அவரது வழக்கமான நடிப்பு அவமதிப்பாக இருப்பதாகக் கூறி, அவருக்கு எதிராக ஆன்லைன் தாக்குதல் நடத்தப்பட்டது.
கடந்த டிசம்பரில் துரந்தர் படத்திற்குப் பிறகு ரன்வீர் சிங் மேற்கொண்ட விமானப் பயணத்தையும் அவரது கண்டாரா சர்ச்சையுடன் இணைத்து, அந்த விவகாரத்தை வேறு திசைக்கு திருப்பும் முயற்சியும் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

இன்ஸ்டாகிராம் கணக்குக்கும் பெய்டு மாஸ் ரிப்போர்ட்டிங் (Paid Mass Reporting)
நடிகரும் திரைப்படத் தயாரிப்பாளருமான அன்ஷூமான் ஜா (Anshuman Jha) இதுபோன்ற ஒரு அனுபவத்தை சந்தித்துள்ளார். ஒரு நடிகரின் தரப்புடன் தொடர்புடைய ஏஜென்சி மூலம், தனது இன்ஸ்டாகிராம் கணக்கு மீது திட்டமிட்டு பெய்டு மாஸ் ரிப்போர்ட்டிங் நடத்தப்பட்டதை அவர் அறிந்துகொண்டார். இதன் நோக்கம் தனது சமூக வலைதள செயல்பாடுகளின் ரீச் மற்றும் ட்ராக்ஷன் (traction)-ஐ பாதிப்பதாக இருந்ததாக அவர் கூறுகிறார். அவருக்கு மில்லியன் கணக்கில் ஃபாலோயர்கள் இருக்கிறார்கள். என்னிடம் ஆயிரக்கணக்கில்தான் உள்ளனர். எனவே, இது முற்றிலும் தேவையற்ற ஒன்று,” என்று ஸ்கிரீன் இதழுக்கு அளித்த பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், “பெரும்பாலான நடிகர்கள் தங்களைப் பற்றி இவ்வளவு அதிகமாக காதலிப்பது எப்படி என்று நான் அடிக்கடி யோசித்திருக்கிறேன். அதே நேரத்தில், தங்களைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதில் அவர்கள் ஏன் இவ்வளவு அதிகமாக சார்ந்திருக்கிறார்கள் என்பதும் ஆச்சரியமாக இருக்கிறது. இந்த முரண்பாடுதான் மிகச் சிறந்த  ப்ளாக் காமெடி (‘black comedy’). அவர்களின் ஈகோ, ‘நான்தான் மிகச் சிறந்தவன்’ என்று சொல்கிறது. ஆனால் அவர்களுக்குள் இருக்கும் பாதுகாப்பற்ற உணர்வு ‘நீங்களும் அப்படித்தான் நினைக்கிறீர்களா?’ என்று கேட்கிறது,” என்று அன்ஷூமான் ஷா தெரிவித்துள்ளார்.

பணம் கொடுத்து நடத்தப்படும் ட்ரோலிங்கின் பொருளாதாரம்

ஒருகாலத்தில் ஆடம்பரமான ஒன்றாக இருந்தது, இப்போது மிகவும் எளிமைப்படுத்தப்பட்டு எளிதில் அணுகக்கூடியதாக மாறிவிட்டது. இதனால், எண்ணற்ற பிரபலங்களும் அவர்களது பி.ஆர் நிறுவனங்களும் இந்த ஓ.ஆர்.எம். (ORM (Online Reputation Management) நிறுவனங்களைத் தங்களது ஸ்பீட் டயலில் வைத்திருக்கின்றனர். ஒவ்வொரு நிறுவனத்துக்கும் கட்டணம் மாறுபடும். அதேபோல், நடத்தப்படும் பிரச்சாரத்தின் அளவைப் பொறுத்தும் கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது.

mrs1
மிஸஸ் படத்தில் சன்யா மல்ஹோத்ரா

ஷா விஷயத்தில் நடந்ததைப் போல, ஒரு சமூக வலைத்தளக் கணக்கை பெருமளவில் ரிப்போர்ட் செய்வதற்கு குறைந்தபட்சமாக சில ஆயிரம் ரூபாய் செலவாகும். 1,000 பதிவுகளைக் கொண்டு ஒருங்கிணைந்த தாக்குதல் நடத்த வேண்டுமா? அதற்கு ரூ.1 லட்சம். ஆனால், லால் சிங் சத்தா (2022) திரைப்படத்திற்கு எதிராக நடத்தப்பட்டதும், சமீபத்தில் துரந்தர் திரைப்படத்திற்கு ஆதரவாக நடத்தப்பட்டதுமான பெரிய அளவிலான, நீண்டகால அவதூறு பிரச்சாரமாக இருந்தால், அதற்கான கட்டணம் ரூ.50 லட்சத்தையும் தாண்டக்கூடும்.

மனிதர்களைக் கொண்டு செயல்படும் ட்ரோல் ஃபார்ம்களுக்கு, நிச்சயமாக, பாட்களை (Bots) விட அதிக செலவாகும். செயற்கை நுண்ணறிவு (AI) வந்த பிறகு இதுபோன்ற செயல்பாடுகள் இன்னும் குறைந்த செலவில் செய்யக்கூடியதாகிவிட்டன. ஆனால், மனிதர்களின் நேரடி பங்களிப்பு தேவைப்பட்டால் அதற்காக அதிக பணம் செலவழிக்க வேண்டும். நான் பரிந்துரைப்பது என்னவென்றால், முதலில் மனித ட்ரோல்களைக் கொண்டு தொடங்கி, பின்னர் பாட்களைப் பயன்படுத்தி அதை மிகப்பெரிய அளவில் கொண்டு செல்ல வேண்டும்” என்று முன்னாள் பணம் பெறும் ட்ரோலர் ஒருவர் ஸ்கிரீன் இதழுக்கு தெரிவித்துள்ளார்.

இப்போது இதில் மிகப்பெரிய பங்கு பாட்களுடையது; அவை உண்மையான மனிதர்கள்கூட அல்ல. நீண்டகாலமாக பயன்படுத்தப்பட்ட பழைய கணக்குகள் மொத்தமாக வாங்கப்படுகின்றன. போலி சுயவிவரங்களை உருவாக்குவதற்காக சிம் (SIM) பண்ணைகள் செயல்படுகின்றன. மேலும், சில நிமிடங்களுக்குள் ஒரு கருத்துப் பகுதியை நூற்றுக்கணக்கான கருத்துகளால் நிரப்பவோ அல்லது ஒரு ஹேஷ்டேக்கை டிரெண்டிங்கிற்கு கொண்டு வரவோ கூடிய ஸ்கிரிப்ட்களும் பயன்படுத்தப்படுகின்றன” என்கிறார் ரித்திமா.

மேலும், இவை அனைத்தும் இயல்பாக நடைபெறுவது போலத் தோன்றும் வகையில் திட்டமிடப்படுகின்றன. சில உண்மையான பணம் பெறும் ட்ரோல்கள் ஒரு கருத்தை விதைக்கின்றனர்; அதை நூற்றுக்கணக்கான பாட்கள் பெரிதாக்குகின்றன. இதனால், சமூக வலைத்தளங்களும் பார்வையாளர்களும் அதை உண்மையான பொதுமக்களின் கருத்தாக நினைத்துக்கொள்கின்றனர். ஆனால், அந்தக் கணக்குகளைத் திறந்து பார்த்தால், அவற்றில் புகைப்படங்கள் இருக்காது, முறையான பெயர்கள் இருக்காது; ஒன்று முதல் ஐந்து பின்தொடர்பவர்கள் மட்டுமே இருப்பார்கள்” என்று கூறுகிறார்.

anurag-aaliyah_2
அனுராக் காஷ்யப் தனது மகள் ஆலியாவுடன் Photograph: (புகைப்படம்: ஆலியா காஷ்யப்/இன்ஸ்டாகிராம்)

இது இணைய உலகில் பிரபலமாக அறியப்படும் போலி அடையாளப் பயன்பாடு (“Sockpuppetry”) எனப்படும் நடைமுறையின் ஒரு சிறந்த உதாரணமாகும். அதாவது, பொதுமக்களின் கருத்தை உருவாக்கவோ அல்லது மாற்றவோ, பெருமளவில் போலியான இணைய அடையாளங்களை உருவாக்குவது. இவ்வாறு உருவாக்கப்படும் போலியான பதிவுகள் மற்றும் கருத்துகளை நம்பகமான ஊடக நிறுவனங்கள் அறிந்தோ அறியாமலோ செய்தியாக எடுத்துக்கொள்ளும் நிலை ஏற்படலாம். இதன் மூலம் செயற்கையாக உருவாக்கப்பட்ட கருத்துக்கு மீண்டும் புதிய உயிர் கிடைக்கிறது.

இதில் முக்கியமான வித்தியாசம் இருப்பது உத்தியில் தான். இயல்பான ட்ரோலிங் என்பது தொடர்ந்து நடைபெறும்; அதற்குப் பின்னால் ஒரு தெளிவான நோக்கம் இருக்கும் — புறக்கணிப்பை ஏற்படுத்துவது, வெளிப்படையாக வாதிடுவது அல்லது சட்டரீதியான பிரச்சினைக்குக்கூட செல்வது. ஆனால், பணம் கொடுத்து நடத்தப்படும் ட்ரோலிங் என்பது எந்தவித சிந்தனையும் இல்லாமல் செய்யப்படுவதால், அதை எதிர்கொள்வது இன்னும் கடினமாகிறது” என்று திரைக்கதை எழுத்தாளர் அனு சிங் குறிப்பிடுகிறார்.

கடந்த ஆண்டு ஜீ 5 தளத்தில் வெளியான, சான்யா மல்ஹோத்ரா நடித்த ஆரதி கடவ் இயக்கிய மிஸஸ் திரைப்படத்திற்குப் பிறகு, அனு சிங்கும் கணிசமான அளவில் பணம் கொடுத்து நடத்தப்பட்ட ட்ரோலிங்கை எதிர்கொண்டுள்ளார். 2021ஆம் ஆண்டு ஜியோ பேபி இயக்கிய மலையாளத் திரைப்படமான தி கிரேட் இந்தியன் கிச்சன் (The Great Indian Kitchen) திரைப்படத்தின் இந்தி ரீமேக், இந்தி மொழித் தழுவல் காரணமாக மட்டுமல்லாமல், மிகப்பெரிய அளவிலும் நீண்டகாலமாகவும் நடத்தப்பட்ட பணம் கொடுத்து செய்யப்படும் ட்ரோலிங் பிரச்சாரத்தாலும் அதிகமான எதிர்வினைகளைச் சந்தித்தது.

ட்ரோல் ஃபார்ம்களும் கிளிக் ஃபார்ம்களும் முதலில் அரசியல் தவறான தகவல்களைப் பரப்புவதற்காகத் தொடங்கியிருக்கலாம். ஆனால், இப்போது அவை ஆவணப்படுத்தப்பட்ட வணிக மாதிரிகளாகிவிட்டன. பொழுதுபோக்குத் துறையின் பி.ஆர் இயந்திரமும் அங்கிருந்துதான் இந்த முறையை எடுத்துக்கொண்டுள்ளது” என்று அனு கூறுகிறார்.

ட்ரோல்கள் பெரும்பாலும் பொதுவெளியிலேயே தங்களது செயல்பாடுகளை நிறுத்திக்கொள்வதில்லை. பிரபலங்களின் தனிப்பட்ட மெசேஜ் பாக்ஸுக்குள்ளும் அவர்கள் நுழைகின்றனர். என்னுடைய ஆக்ரா (Agra) திரைப்படம் மிகப்பெரிய அளவில் ட்ரோல் செய்யப்பட்டது. குறிப்பாக, எனது அரசியல் கருத்துகளையும் பல்வேறு விஷயங்கள் குறித்த எனது நிலைப்பாடுகளையும் நான் வெளிப்படையாகக் கூறிய பிறகு, அவர்களில் பலர் என்னுடைய மற்றும் எனது துணையின் தனிப்பட்ட மெசேஜ் பாக்ஸுக்குள் நுழைந்து எங்களது அமைதியைக் குலைக்க நேரம் செலவிட்டனர்” என்கிறார் நடிகை பிரியங்கா போஸ்.

பணம் கொடுத்து நடத்தப்படும் ட்ரோலிங்கின் நச்சுத்தன்மையும் (அடையாள மறைவும்), அதன் மிகப்பெரிய அளவும் தற்போது எந்த அளவுக்கு அதிகரித்துள்ளன என்றால், அவற்றைக் கண்காணிப்பதே மிகவும் கடினமான பணியாகிவிட்டது. எந்தவிதமான விளைவுகளையும் சந்திக்காமல் மிகவும் மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தவும், பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை மிரட்டல்களை விடுக்கவும் அவர்களால் முடிகிறது. பல ஆண்டுகளாக நான் அவை தொடர்பான ஸ்கிரீன்ஷாட்களைச் சேமித்து வைத்திருக்கிறேன்” என்கிறார் நடிகை தியா மிர்சா.

பாட்களிடமிருந்தும், ஒரே மாதிரியான காப்பி-பேஸ்ட் கருத்துகளைப் பயன்படுத்துவதாகத் தோன்றும் நபர்களிடமிருந்தும் பலவிதமான அவதூறுகளையும் அவமதிப்புகளையும் நான் எதிர்கொண்டிருக்கிறேன்” என்றும் அவர் கூறுகிறார். நடிகையும் திரைப்பட இயக்குநருமான ரேணுகா ஷஹானே, பல ஆண்டுகளுக்கு முன்பே இந்த ட்ரோலிங்கின் முறைகளை கவனித்திருந்தார். அப்போது அவர் ட்ரோல்களுடன் நேரடியாக உரையாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஆனால், பல ஆண்டுகளுக்குப் பிறகுதான் அவர்கள் பணம் பெற்றுக்கொண்டு செயல்பட்டவர்கள் என்பதை அவர் உணர்ந்தார்.

அவர்களின் கொடூரமான அணுகுமுறை அதிர்ச்சியளித்தது! பின்னர் ‘டூல்கிட்’ என்று ஒன்று இருப்பதைப் புரிந்துகொண்டேன். அரசியல் கட்சிகள் தங்களது ஆதரவாளர்களை ஒருங்கிணைக்க வாட்ஸ்அப் குழுக்களை உருவாக்கி, குறிப்பிட்ட நபர்களை ட்ரோல் செய்யுமாறு அவர்களிடம் கூறுகின்றன. ஒரே மாதிரியான வார்த்தைப் பயன்பாடு, அதே எழுத்துப் பிழைகள் அல்லது ஒரே மாதிரியான தவறான தகவல்கள் மீண்டும் மீண்டும் பரப்பப்படுவதை வைத்து இதை என்னால் கண்டுபிடிக்க முடிந்தது. அவர்களில் பலர் பாட்களாகவே இருந்தனர்! அவர்களுடன் நாம் வாதிடுகிறோம் என்பதை நினைத்துப் பாருங்கள்!” என்று அவர் ஆச்சரியத்துடன் கூறுகிறார்.

திரைப்பட இயக்குநரும் நடிப்பு பயிற்சியாளருமான அதுல் மொங்கியா கூறுகையில், இந்தியாவில் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக பணம் கொடுத்து நடத்தப்படும் ட்ரோலிங் நடைபெற்று வருவதாகவும், அதை வெகு தொலைவிலிருந்தே கண்டுபிடித்துவிட முடியும் என்றும் தெரிவிக்கிறார். ஆனால், ஒருவரது குடும்பத்தின் பாதுகாப்பு தொடர்பான விஷயமாக மாறும்போது, மிகவும் கடினமான மனநிலையைக் கொண்டவர்களைக்கூட இது பாதிக்கிறது.
“ஐ.டி சோதனைகளைக்கூட பெரிதாகப் பொருட்படுத்தாமல், ட்ரோல்களை நேரடியாக எதிர்கொள்ளக்கூடிய அனுராக் காஷ்யப் எனக்கு நினைவுக்கு வருகிறார். ஆனால், அவரது மகள் ஒரு சமூக ஊடக இன்ஃப்ளூயன்சராக இருக்கும் நிலையில், அவருக்கு பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை மிரட்டல்கள் வரத் தொடங்கியபோதுதான் அது அவரை உண்மையாகப் பாதித்தது” என்கிறார் மொங்கியா.

தனது மகள் ஆலியா காஷ்யப்பின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு சில காலம் சமூக வலைத்தளங்களில் இருந்து விலகியிருந்த காஷ்யப் தற்போது மீண்டும் சமூக வலைத்தளங்களுக்குத் திரும்பியுள்ளார். நாடு முழுவதும் சமீபத்தில் நடைபெற்ற மாணவர் போராட்டங்கள் மட்டுமல்லாமல், பணம் கொடுத்து நடத்தப்படும் ட்ரோலிங் என்ற இந்தச் சிறு தொழில்துறை எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்த ஆழமான புரிதலும் அவருக்கு இதற்கான துணிச்சலை அளித்துள்ளது.

நான் அடிக்கடி அதிக அளவில் ட்ரோல் செய்யப்படுகிறேன். அவர்கள் இதைச் செய்யும்போது கொஞ்சம் புத்திசாலித்தனமாகச் செய்ய வேண்டும் என்று மட்டுமே விரும்புகிறேன். காப்பி-பேஸ்ட் செய்வதைத் தவிர்த்து, உண்மையான கருத்து போலத் தோன்றும் வகையில் செய்ய வேண்டும். இல்லையென்றால், இன்றைய காலகட்டத்தில் இது பணம் கொடுத்து நடத்தப்படும் ட்ரோலிங் என்பது அனைவருக்கும் தெரிந்துவிடும்” என்கிறார் காஷ்யப்.

உண்மையில், பணம் கொடுத்து ட்ரோலிங் செய்யும் தொழிலில் இருக்கும் எனது உறவினர் ஒருவர் 24 மணி நேரமும் இயங்கும் அலுவலகத்தை நடத்துகிறார். எனவே, எனக்கு எதிராக நடைபெறும் ட்ரோலிங்கில் பெரும்பாலானவை போலியானவை என்பது எனக்குத் தெரியும். அவர் என்னிடம் நகைச்சுவையாக, ‘அண்ணா, உங்கள் பதிவுகளால்தான் நாங்கள் நிறைய பணம் சம்பாதிக்கிறோம்’ என்று கூறுவார்” என்று சிரித்தபடி தெரிவிக்கிறார் இயக்குநர். திரைப்படத் துறையில் போட்டியிடும் பல்வேறு குழுக்களும், வெவ்வேறு கொள்கைகளைச் சார்ந்த அணிகளும் ஒன்றுக்கொன்று எதிராக மோதிக்கொண்டிருக்கும் நிலையில், திரைப்படத் துறைக்கு பதிலாக தற்போது வேகமாக வளர்ந்து வரும் மற்றொரு தொழில்துறை இருக்கிறது என்றால், அது பணம் கொடுத்து நடத்தப்படும் ட்ரோலிங் தொழில்துறைதான்.

ஒரு காலத்தில் கங்கனா ரனாவத் மற்றும் ரன்தீப் ஹூடா ஆகிய இருவரையும் எங்கள் நிறுவனம் நிர்வகித்து வந்தது. பின்னர், ஆலியா பட்டுக்கு ஆதரவாக ரன்தீப் எக்ஸ் தளத்தில் பதிவிட்டபோது, இருவருக்கும் இடையே ட்விட்டர் போர் உருவானது. தாங்கள் இருவரும் ஒரே பி.ஆர் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் என்பது அவர்களுக்குத் தெரியாது. எனவே, இரு தரப்பிலிருந்தும் பணம் சம்பாதிக்கும் நோக்கில் எங்கள் நிறுவனம் அந்த மோதலை மேலும் தூண்டிவிட்டது. நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல, இரு தரப்பினரிடமிருந்தும் பணம் சம்பாதிக்க முடியும் என்பதற்காக பிரச்சினையை மேலும் பெரிதாக்கினோம். இறுதியில், இதன் விளைவாக ரன்தீப் அந்த நிறுவனத்திலிருந்து விலகிச் சென்றார்” என்று முன்னாள் பணம் பெறும் ட்ரோலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஓ.ஆர்.எம்களைத் தாண்டியும், “ஒவ்வொரு திரைப்பட வெளியீட்டுக்கும் முன்பாக, சில யூடியூப் விமர்சகர்கள், ட்விட்டர் கருத்தாளர்கள் மற்றும் திரைப்படத் துறையைச் சேர்ந்த சமூக ஊடகப் பிரபலங்கள் கொண்ட ஒரு குழு, மாஃபியா கும்பலைப் போலவே செயல்பட்டு, தயாரிப்பாளர்களிடம் பணம் கேட்டு நெருக்கடி கொடுக்கிறது” என்கிறார் திரைக்கதை எழுத்தாளர் சுமித் ராய். “பலவீனமான ஒரு தருணத்தில் எந்தவொரு தயாரிப்பாளரும் அவர்களுக்கு பணம் கொடுத்துவிட்டால், அது அவர்களுக்கே மேலும் பிரச்சினைகளை ஏற்படுத்தும். மாஃபியா கும்பலைக் கையாள்வதில் உள்ள அடிப்படை விதிகளில் ஒன்று, அவர்களுக்கு ‘பாதுகாப்புக் கட்டணம்’ என்ற பெயரில் பணம் கொடுக்கத் தொடங்கிவிட்டால், அந்தப் பணம் கொடுப்பது ஒருபோதும் முடிவுக்கு வராது என்பதுதான்” என அவர் மேலும் கூறுகிறார்.

சமீபத்தில் அமால் மாலிக் செய்ததைப் போல, பிரபலங்கள் தைரியமாக வெளியில் வந்து உண்மையை நேரடியாகப் பேசுவது அரிது. கடந்த மாதம் வெளியான அவரப்பன் 2 (‘Awarapan 2’) திரைப்படத்தின் தலைப்புப் பாடலைத் தொடர்ந்து, தமக்கு எதிராக பணம் கொடுத்து ட்ரோல்களை இயக்கியதாக சக இசையமைப்பாளர் தனிஷ்க் பாக்சியை அமால் மாலிக் குற்றம்சாட்டியிருந்தார். “பெரிய நட்சத்திரங்களைப் பொறுத்தவரை இது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. ஏனெனில், ஏற்கனவே இருப்பதைவிட ட்ரோலிங்கிற்கு அதிக கவனத்தை இது பெற்றுத் தரக்கூடும். பணம் கொடுத்து நடத்தப்படும் ட்ரோலிங் அனைத்திலும் ஒரு திட்டமிட்ட தூண்டுதல் இருக்கிறது — அதற்கு பதிலளிப்பதன் மூலம், அதற்கு சட்டபூர்வமான அங்கீகாரம் கிடைத்துவிடுகிறது” என்கிறார் அந்தப் பிரபலங்களுக்கான மக்கள் தொடர்பு (PR) நிபுணர்.

பணம் கொடுத்து நடத்தப்படும் ட்ரோலிங் இனி பலமற்ற புலி அல்ல

நடிகர்கள், திரைப்பட இயக்குநர்கள் மற்றும் திரைக்கதை எழுத்தாளர்கள், பணம் கொடுத்து நடத்தப்படும் ட்ரோலிங்கின் அச்சுறுத்தலைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது திரைப்படத் துறையின் நலனுக்கே மிகவும் அவசியம் எனக் கருதுகின்றனர். ஏனெனில், தற்போது இந்தப் பிரச்சினை ஒரு கட்டத்தை எட்டியுள்ளது. இது திரைப்படங்களின் கலை வெளிப்பாட்டை மட்டுமல்லாமல், அவற்றின் வணிகத்தையும் கடுமையாகப் பாதிக்கத் தொடங்கியுள்ளது.

2022ஆம் ஆண்டு தனது திரைப்படம் தொடர்பான ட்ரோலிங் குறித்து ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு நடிகர் அமீர் கான் பிரபலமாக, “எனது திரைப்படத்தைப் பார்க்கும்படி உங்களை என்னால் கட்டாயப்படுத்த முடியாது. பார்க்க விருப்பமில்லை என்றால் தயவுசெய்து பார்க்க வேண்டாம்” என்று கூறியிருந்தார். அதன் விளைவாக, அவரது ‘லால் சிங் சத்தா’ திரைப்படத்தைப் பார்க்க திரையரங்குகளுக்கு ரசிகர்கள் பெருமளவில் வரவில்லை. ஆனால், சில மாதங்களுக்குப் பிறகு அந்தத் திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியானபோது, பரவலாக பாராட்டப்பட்டது.

திரைப்படத் துறையினர் மட்டுமல்ல, திரைப்பட விமர்சகர்கள் பலரும் பணம் கொடுத்து நடத்தப்படும் ட்ரோலிங்கிற்கு இலக்காகி வருகின்றனர். சமீபத்தில் ஆதித்யா தர் இயக்கிய மிகப்பெரிய வெற்றிப் பெற்ற ஸ்பை த்ரில்லர் திரைப்படமான ‘துரந்தர்’ குறித்து விமர்சனம் எழுதிய டஜன் கணக்கான விமர்சகர்கள் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டனர். அந்த அளவுக்கு நிலைமை சென்றதால், சர்வதேச அளவில் வாசகர்களைக் கொண்ட ஒரு ஊடக நிறுவனமே தனது தலைமை விமர்சகர் எழுதிய விமர்சனத்தை இணையதளத்தில் இருந்து நீக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

நல்ல பி.ஆர் அல்லது மோசமான பி.ஆர் என இரண்டுமே பல விஷயங்களை உருவாக்கவும் அல்லது சீரழிக்கவும் முடியும். உண்மையாகச் சொன்னால், இது பொழுதுபோக்கு என்பதன் அடிப்படை நோக்கமான மனிதநேயத்தையும் மகிழ்ச்சியையும் பறித்துவிடுகிறது. மக்கள் ஒன்றுகூடி, பாதுகாப்பான சூழலை உருவாக்கி, ஒருவருடன் ஒருவர் இணைந்து செயல்படுவதுதான் பொழுதுபோக்கின் அடிப்படை. ஆனால், ஒருவரைப் பற்றி அவதூறாகப் பேசுவதும் அவரை மனிதநேயமற்றவராகச் சித்தரிப்பதும் அதற்கு முற்றிலும் எதிரானது” என்கிறார் பிரியங்கா போஸ்.

பணம் கொடுத்து நடத்தப்படும் ட்ரோலிங்கை “தரம்தாழ்ந்த அணுகுமுறை” என்று விமர்சிக்கும் தியா மிர்சா, “மற்றொரு நபரைத் தாழ்த்துவதன் மூலமாகவோ அல்லது அவருடைய கண்ணியத்தைத் தாக்குவதன் மூலமாகவோ ஒருவர் தன்னைப் பற்றி எப்படி நன்றாக உணர முடியும்? இது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்” என்று கேள்வி எழுப்புகிறார்.
“திரைப்படத் துறையில் ஏராளமான ரசிகர் மோதல்கள், தயாரிப்பாளர்களுக்கு இடையிலான மோதல்கள், வணிக ரீதியான போட்டிகள் என பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. உண்மையில், நாம் ஒருவரின் வெற்றியை மற்றொருவர் கொண்டாட வேண்டும். அதேபோல், யாராவது தோல்வியடைந்தால், அவர்களுக்காக உண்மையாக வருந்த வேண்டும். ஆனால், ஒருவேளை நான் இன்னும் கொஞ்சம் இலட்சியவாதியாக இருக்கிறேனோ!” என்கிறார் ரேணுகா ஷஹானே.

பணம் கொடுத்து நடத்தப்படும் ட்ரோலிங்கால் தனக்கு ஏற்பட்ட முழுமையான அனுபவங்களைக் கருத்தில் கொண்ட அனுராக் காஷ்யப்பும், ஒருவரின் மனநிலைக்கு ஏற்படும் பாதிப்பைத் தவிர, இதற்கு மிகப்பெரிய அளவில் நீண்டகால தாக்கம் இருப்பதை மறுக்கிறார். இது பலரது மனநலனைப் பாதிக்கிறது. அதன் விளைவாக, அவர்களது தொழில் வாழ்க்கையும் பாதிக்கப்படலாம்” என்கிறார் இயக்குநர் அனுராக் காஷ்யப்.

மா பிகைன் (‘Maa Behen’) திரைப்படத்தின் எழுத்தாளர் பூஜா தொலானி, பணம் கொடுத்து நடத்தப்படும் ட்ரோலிங் என்பது “இந்தத் திரைப்படத் தொழிலுக்கு ஒரு படைப்பாற்றல் சார்ந்த மறுசீரமைப்பு தேவைப்படுவதன் அறிகுறி” என்கிறார். ஒருவர் தோல்வியடைவோம் என்ற அச்சத்திலும், விரக்தியிலும், தன்னை மேம்படுத்துவதற்கோ அல்லது சிறந்த தொழில்முறை முடிவுகளை எடுப்பதற்கோ கவனம் செலுத்தாமல், மற்றவர்களைத் தாழ்த்த முயற்சிக்கிறார். இது தொலைநோக்குப் பார்வையற்ற செயல். ஒருவர் அமர்ந்திருக்கும் கிளையையே தானே வெட்டிக் கொள்வதைப் போன்றது.

ஏனெனில், நீங்கள் உருவாக்கும் சர்ச்சைக்கும் பரபரப்புக்கும், உங்கள் படைப்பைவிட பொதுமக்களின் மனதில் அதிக இடம் கிடைக்க நீங்கள் அனுமதிக்கிறீர்கள்” என அவர் விளக்குகிறார். நமது திரைப்படத் துறையில், ஒருவரைப் பற்றிய பொதுவான கருத்து என்பது ஒரு வகையான நாணயம் போன்றது. சமூக ஊடகம் என்பது அந்த நாணயம் பரிமாறப்படும் பங்குச் சந்தை போன்றது. இப்போது ஒவ்வொருவரின் மேலாளரும், குழுவினரும் திடீரென நிதி ஆய்வாளர்களாக மாறிவிட்டனர்.

மக்கள் தங்களுடைய பணியின் மீது போதுமான நம்பிக்கை வைத்து, அந்தப் பணியே தங்களுக்காகப் பேச அனுமதித்தால், உலகம் இன்னும் கொஞ்சம் இனிமையானதாக இருக்கும். அதேபோல், தங்களின் பணிக்காகத் தாங்களே பேசுவதற்கும் அவர்கள் தங்கள் மீது போதுமான நம்பிக்கை வைத்திருக்க வேண்டும்” என்கிறார் அன்ஷுமான் ஷா. மேலும், பணம் கொடுத்து நடத்தப்படும் ட்ரோலிங் என்பது தற்போது “எல்லாவற்றையும் ஆட்டிப்படைக்கும் சக்திவாய்ந்த அரக்கனும் அல்ல; சில நேரங்களில் நாம் நினைப்பது போல எந்தத் தீங்கும் செய்யாத ஒரு வேடிக்கையான நாடகமும் அல்ல” என்பதையும் அவர் வலியுறுத்துகிறார்.

Source link