புதுடில்லி: நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராட்டம் தீவிரமடைந்த நிலையில், மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவியை ராஜினாமா செய்தார்.
நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக சிஜேபி இயக்கத்தினர் 35 நாட்களாக டில்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வந்தனர். அவர்களுடன் மத்திய அரசு அடுத்தடுத்து பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர்.
இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போராட்டக்காரர்களுக்கு பிரதமர் மோடி உறுதியளித்திருந்தார். மேலும், பிரதமர் மோடி தலைமையில் நேற்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த நிலையில், மத்திய கல்வித்துறை அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதான் பதவியை ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை அவர் பிரதமர் மோடிக்கு அனுப்பி வைத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்; கடந்த 10 நாட்களாக நடந்த நிகழ்வுகள் தனக்கு வேதனை அளிக்கின்றன. நாட்டின் இளைஞர்கள் தீயசக்திகளின் கைகளில் சிக்கிக்கொள்ள அனுமதிக்க மாட்டேன்,
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
