பரபரப்பாக தயாராகும் பரதநாட்டிய மேடை.. ரேவதி உயிருக்கு காத்திருக்கும் ஆபத்து – கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்
கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில் ரேவதி சாமுண்டீஸ்வரி சொன்ன டாகுமெண்டில் கையெழுத்து போட போகும் சமயத்தில் கார்த்திக் தடுத்து நிறுத்திய நிலையில் இன்று கார்த்தி நான் இந்த குடும்பத்தை சேர்க்கணும்னு நினைச்சுகிட்டு இருக்கேன் ஆனா நீ கையெழுத்து போட்டா ஒரு காலமும் இது நடக்காது என ரேவதியை திட்டுகிறான்.
அதன் பிறகு, பாட்டி கோவில் கும்பாபிஷேகத்திற்கான வேலைகளை கவனிக்க சொன்ன கார்த்திக் பரதநாட்டியம் ஆடுவதற்கான வேலைகளை கவனிக்க செல்கிறான். அதற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் செய்கிறான். மறுபக்கம் சிவனாண்டி ரவுடி ஒருவனை சந்தித்து அவனிடம் பணமும் துப்பாக்கியையும் கொடுத்து பரதநாட்டியம் ஆடிக்கொண்டிருக்கும் போது ரேவதியை போட்டு தள்ள வேண்டும் சொல்கிறான்.
இதையடுத்து ரேவதி பரதநாட்டிய மேடைக்கு கிளம்பி வர அங்கு அவளுக்காக செய்யப்பட்ட ஏற்பாடுகளை பார்த்து சந்தோஷம் அடைகிறாள். சாமுண்டீஸ்வரி வீட்டிலே ராஜராஜன், ரோகினி, மயில்வாகனம் ஆகியோர் ரேவதியின் பரத நாட்டியத்தை பார்க்க கிளம்பி வருகின்றனர். சந்திரகலா இதை போட்டு கொடுத்து சாமுண்டீஸ்வரியை அழைத்துக்கொண்டு ஒரு பரதநாட்டிய டான்ஸர் வீட்டுக்கு வருகிறாள்.
இந்த ஊர்லயே சிறந்த பரதநாட்டிய டான்சர் நீங்கதான். ஆனா கார்த்திக் உங்கள வேண்டாம்னு சொல்லிட்டு ரேவதிக்கு இந்த வாய்ப்பு கொடுத்து இருக்காரு என்று சொல்லி அவளை ஏற்றி விட்டு நிகழ்ச்சிக்கு வந்து பிரச்சனை செய்ய ஏற்பாடு செய்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஒற்றை காலில் நிற்க வைத்து தண்டனை கொடுத்த சாமந்தி.. அரசிக்காக துணை நின்ற அர்ஜூன் – சாமந்தி இன்றைய எபிசோட் அப்டேட்
சாமந்தி சீரியலின் நேற்றைய எபிசோடில் வெள்ளைக்காரர்கள் வீட்டை விட்டு கிளம்பியதும் அரசி கோபமாக வீட்டுக்குள் வந்த நிலையில் இன்று அரசி ஒரு மேட்டை கொண்டு வந்து ஹாலில் போட சொல்கிறாள். பிறகு சாமந்தியை அதன் மீது நிற்க சொல்ல சாமந்தி நிற்பது தானே அதெல்லாம் சாதாரணம் என நிற்க அரசி ஒற்றைக்காலில் நிற்க வேண்டும் என அதிர்ச்சி கொடுக்கிறாள். இரவு முழுவதும் இப்படியே நிற்க வேண்டும், ரோபோ நீ நோட்டமிட்டு கொண்டே இருக்க வேண்டும் என ரோபோவுக்கு கட்டளை இட்டுவிட்டு கிளம்பி செல்கிறாள்.
ஒற்றைக்காலில் சாமந்தி நிற்க முடியாமல் தவித்தபடி நிற்க அர்ஜுன் யாரும் இல்லாத சமயத்தில் உள்ளே வந்து அவ ரொம்ப பாவம் அவளுக்கு கொஞ்சம் உதவி பண்ணலாமா என்று கேட்க ரோபோ சாமந்தி ரொம்ப நல்லவள். நீ அவளுக்கு உதவி பண்ணு.. மேடமிடம் நான் எதுவும் சொல்ல மாட்டேன் என்று சொல்ல அர்ஜுன் தனது காலை பிடித்து சாமந்திக்கு முட்டுக் கொடுத்து உதவுகிறான். பிறகு அரசி கீழே இறங்க ரோபோ மேடம் கம்மிங் என்று சத்தமிட அர்ஜுன் இங்கிருந்து ஓடி ஒளிந்து கொள்கிறான்.
பிறகு அரசி வந்ததும் ரோபோ சாமந்தி இரவு முழுவதும் ஒற்றைக்காலில் நின்று கொண்டே இருந்ததாக பொய் சொல்ல சாமந்தியும் டயர்டில் மயங்கி விழப் போக அரசி பொழச்சி போட்டும் என மன்னிக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
வாசுதேவனால் வழிக்கு வந்த அப்பத்தா.. மீனாட்சி கொடுத்த அதிர்ச்சி – வாகை சூடவா இன்றைய எபிசோட் அப்டேட்
வாகை சூடவா சீரியலில் நேற்றைய எபிசோடில் போலீஸ் வீட்டுக்கு வந்து பணத்தை திருப்பி தரவில்லை என்றால் பாண்டியை கைது செய்து விடுவோம் என மிரட்டி என் நிலையில் இன்று, அப்பத்தா இதெல்லாம் வாசுதேவனின் வேலை தான் என்பதை புரிந்து கொண்டு நீங்க போங்க இதுக்கெல்லாம் யார் காரணம் என்று எனக்கு தெரியும் நான் உங்களிடம் பேசிக் கொள்கிறேன் என சொல்லி போலீஸை அனுப்பி வைக்கிறார்.
பிறகு அப்பத்தா வாசுதேவனுக்கு போன் செய்ய வாசுதேவன் உங்கள வழிக்கு வர வைக்க வேற வழி இல்ல என்று சொல்ல அப்பத்தா ஜீவா மீனாட்சி இந்த வீட்டுக்கு வர வைக்க சம்மதம் தெரிவிக்கிறார். பிறகு வீட்டுக்குள் வரும் அப்பத்தா எல்லோரையும் கூட்டி ரெண்டு மருமக இல்லாம நீங்க படுற கஷ்டத்தை என்னால பாக்க முடியல அதனால நான் உங்களை மன்னிச்சிட்டேன். மனோ நீ போய் அவங்கள வீட்டுக்கு கூட்டிட்டு வா என்று சொல்ல வீட்டில் உள்ள எல்லோரும் சந்தோஷப்படுகின்றனர்.
மனோ சந்தோசமாக கிளம்பி சுமதி வீட்டிற்கு வருகிறான். விஷயத்தை கேட்ட சுமதி சந்தோஷப்பட்டு தேன்மொழி அது துணிமணிகளை பேக் செய்ய தொடங்குகிறாள். ஆனால் மீனாட்சி இதற்கு சம்மதிபாளா என்ற சந்தேகம் மனோ மனதிற்குள் எழுகிறது. அதற்கேற்றார் போல வீட்டுக்கு வந்த மீனாட்சி விஷயம் அறிந்து இதற்கு மறுப்பு தெரிவித்து அப்பத்தாவை வந்து அழைத்தால் வருவதாக பதிலடி கொடுக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
