சென்னை: தனியார் பள்ளிகளிடம் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்த மோசடி வழக்கில், முக்கிய நபரான முத்துக்குமாருக்கு எதிராக மத்திய குற்றப்பிரிவு போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர்.
தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்று தருதல், பள்ளிகளை தரம் உயர்த்துதல் உள்ளிட்ட பணிகளுக்கு, 100 கோடி ரூபாய் வாங்கி மோசடி செய்ததாக, தி.மு.க., செய்தித் தொடர்பு குழு துணை தலைவர் அரசகுமார், 59 கைது செய்யப்பட்டார்.
இது தொடர்பான வழக்கில், அரசகுமார் கூட்டாளியும், தி.மு.க., பிரமுகருமான முத்துகுமார், 48 என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்; தலைமறைவாக இருந்து வருகிறார்.
முத்துகுமார் வெளிநாடு களுக்கு தப்பிச் செல்லாமல் இருக்க, தேடப்படுபவராக அவரை அறிவிக்கும் வகையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், ‘லுக் அவுட் நோட்டீஸ்’ பிறப்பித்துள்ளனர்.
