சட்டப்பேரவையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், ”தி.மு.க ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்ததாக காவல்துறை கொள்கை விளக்க குறிப்பில் ஒப்புக் கொண்டதற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த அரசு அமைந்து சரியாக 116 நாட்கள் ஆகி உள்ளது. இந்த நாட்களில் இந்த அரசு தி.மு.க ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை ரத்து செய்கிறது, இல்லை என்றால் பெயர் மாற்றம் அறிவிப்பு வருகிறது.
ஒரு லிட்டர் விஷம் ரூ.1 கோடியா? என்ன தங்கத்த விட டாப்புல போகுது; எங்க கிடைக்குது தெரியுமா?
பரந்தூர் விமான நிலையம், காஞ்சிபுரம் புது நகர் திட்டம், குளோபல் ஸ்போர்ட்ஸ் சிட்டி திட்டம், நாமக்கல் சிப்காட், பரந்தூர் மெட்ரோ, ஈ.சி.ஆர் மேம்பாலம், ஓசூர் டைட்டில் பார்க் என ரத்து திட்டம் லிஸ்ட் ஏறிக் கொண்டே இருக்கிறது. தி.மு.க ஆட்சியில் தமிழ்நாடு டாப் கியரில் போய் கொண்டிருந்தது. தற்போது ரிவர்ஸ் கியரில் போய் கொண்டிருக்கிறது.
பல்வேறு வாக்குறுதிகளை அளித்தீர்கள், நிறைவேற்றவில்லை. தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் என்று சொன்னீர்கள். இந்த அரசின் திட்டங்களை தாய்மாமன் காதுகுத்தும் திட்டம் என்று சொல்லிவிடலாம். திட்டங்கள் மக்களை ரீச் ஆவதைவிட, போடும் ரீல்ஸ் ரீச் ஆனால் போதும் என நினைக்கிறார்கள்.
116 நாள் ஆட்சியில், பெண்களுக்கு பெரிய தொல்லையாக உள்ளது. கறிக்கடையில் இல்லாத அளவிற்கு தமிழகத்தில் தினமும் வெட்டு குத்து நடக்கிறது. ஆட்சிக்கு வந்த பின் 10 ஆணவக்கொலை நடந்துள்ளது. அதற்கும் பெயர் மாற்றிவிட்டனர். 116 நாட்களில் 8 சிறை மரணங்கள் நடந்துள்ளது. அதற்கு நீதியும் கிடைக்கவில்லை, குறைந்தபட்சம் ஸாரியும் கிடைக்கவில்லை.
இவர்களை வெளிப்படையாக விமர்சனம் செய்யும் பா.ஜ.க-வினர் கைதாகவில்லை, ஏன் அவர்கள் மீது புகார் கூட கொடுப்பதில்லை. அவர்களுக்கு வந்தால் ரத்தம், எங்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா. பா.ஜ.க அடித்தாலும், வலித்தாலும் வெளியில் சொல்ல கூடாது என்கிற ஆளுங்கட்சியின் இந்த அரசியல் வியூகத்தை இதுவரை நாங்கள் கேட்டதும் இல்லை, பார்த்ததும் இல்லை.
கடந்த 116 நாட்களில் 200 கொலைகள், 300-க்கும் மேற்பட்ட பாலியல் வன்கொடுமைகள் நடந்துள்ளன. நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு இன்னும் 3 நாட்கள் இருக்கிறது. பிரிப்பேர் ஆகி முதல்வர் வந்து பதில் சொல்லலாம் என உதயநிதி தெரிவித்தார். இதற்கு த.வெ.க சார்பில் கடும் எதிர்ப்பு எழ, குறுக்கிட்ட சபாநாயகர், முதல்வர் கைகளை கட்டியபடி கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறார்.
உங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்க அவர் தயாராக வருவார் என்று கூற, அதை தானே நானும் சொன்னேன். பிரிப்பேர், தயாரிப்பு இரண்டும் ஒன்று தான். நான் ஆங்கிலத்தில் சொன்னேன், நீங்கள் தமிழில் சொன்னீர்கள் என்று உதயநிதி பேசினார்.
