“பிக்பாஸ்” ராணவின் “பிரேக் பாஸ்ட்” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

சென்னை,

டைரக்டர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய காந்தி கிருஷ்ணா, விஷால்- ரீமாசென் நடிப்பில் ‘செல்லமே’ படத்தை இயக்கி கவனம் ஈர்த்தார். ‘ஆனந்த தாண்டவம்’ என்ற படத்தையும் இயக்கியுள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு ‘பிரேக் பாஸ்ட்’ என்ற படத்தை காந்தி கிருஷ்ணா இயக்கியுள்ளார்.

இதில் ‘பிக்பாஸ்’ ராணவ், ரோஸ்லின், கிருத்திக் மோகன், அமிதா ரங்கநாதன், அர்ச்சனா, சம்பத் ராம் உள்பட பலர் நடித்துள்ளனர். பிரேம் கிளாசிக் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் விரைவில் இந்த படம் ரிலீசுக்கு வர இருக்கிறது.

இந்நிலையில், ‘பிரேக் பாஸ்ட்’ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் வைரமுத்து, வசந்த பாலன், பரத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் ஏப்ரல் 24ம் தேதி வெளியாகவுள்ளது.

Source link