சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சிக்கு காமன் மேன் நிகழ்ச்சியில் இருந்து வந்த மணிவாணனின் அம்மா இறந்துவிட்டதாக நேற்று இரவு முதல் சோசியல் மீடியாவில் செய்திகள் பரவி வந்தது. ஆனால் அது உண்மை இல்லை என்று அவருடைய நண்பர் மறுப்பு தெரிவித்து வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.
அதாவது பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று சொல்கிற மாதிரி பல விஷயங்கள் நடந்து வருகிறது. முதல் நாளே மேடையில் வைத்து சில போட்டியாளர்களை எவிட் செய்து அனுப்பி விட்டார்கள். அதுபோல பிக் பாஸ் வீட்டிற்குள் வந்து இரண்டு நாளிலேயே பிளாக் பாண்டிக்கு உடல்நிலை சரியில்லை என்று அவரையும் அனுப்பி விட்டார்கள். நான் எந்த நிகழ்ச்சியை விட்டுப் போகவில்லை என்று பிளாக் பாண்டி எவ்வளவோ கதறி அழுதிருந்தார். ஆனால் உடல்நிலை தான் முக்கியம் என்று அவர் அனுப்பப்பட்டதும் பெரிதாக பேசப்பட்டது.
பிறகு உள்ளிருந்த போட்டியாளர்களில் ஒருவரையும் எவிக்சன் செய்து அனுப்பி இருக்கிறார்கள். இதில் பிளாக் பாண்டி வெளியே அனுப்பப்பட்டதும் அவருக்கு பதிலாக காமன்மேன் நிகழ்ச்சியில் கடைசி வரைக்கும் இருந்த மணிவாணன் வைல்ட் கார்டு என்ட்ரியாக பிக் பாஸ் வீட்டிற்குள் வந்தார். வழக்கம் போல இவர் வந்த பிறகு நிகழ்ச்சி எப்படி இருக்கும் என்று எதிர்பார்ப்போடு ரசிகர்கள் இருந்தனர்.
உள்ளே அதிகமாக சவுண்டு கொடுத்து கொண்டிருந்த முனியம்மாவிற்கு சரி சமமான போட்டியாளராக இவரும் உள்ளே வந்தார். வந்ததும் முதல் நாள் நல்லபடியாகத்தான் விளையாட்டு தொடங்கியது. ஆனால் நேற்று இரவு திடீரென அவருடைய அம்மா இறந்து போய்விட்டதாகவும் அப்போது நீங்கள் வெளியே போகிறீர்களா? என்று கேட்டபோது அவர் நான் போகவில்லை, பிக் பாஸ் வீட்டிலேயே இருக்கிறேன் என்று சொல்லிவிட்டதாகவும் தகவல் பரவி வந்தது.
ஆனால் உண்மையில் இறந்தது அவருடைய அம்மா இல்லையாம் அக்காவாம். அதுவும் அக்கா சேலத்தில் வசித்து வந்திருக்கிறார். கொஞ்ச நாட்களாகவே உடல்நிலை குறைபாடு காரணமாக சிகிச்சை எடுத்து வந்திருக்கிறார். இந்த நிலையில் திடீரென இறந்திருக்கிறார். இந்த செய்தி மணிவானனுக்கு சொல்லப்பட்டதும் அவர் கஷ்டப்பட்டு கிடைத்த இந்த வாய்ப்பை விட்டு வெளியே போனால் மீண்டும் கிடைக்காது என்பதற்காக தான் வரவில்லை பார்த்துக் கொள்கிறேன் என்று சொன்னதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து அவருடைய நண்பர் விளக்கம் கொடுத்து இருக்கிறார். முதலில் மணிவாணனின் அம்மா இறந்து போய்விட்டார் என்று சொன்னதும் பல விமர்சனங்கள் எழுந்தது. பெத்த அம்மா இறந்து போய்விட்டார்கள் அதைவிட இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி முக்கியமா? இந்த நிகழ்ச்சியில் கிடைக்கும் பணத்துக்காகவும் புகழுக்காகவும் பெத்த அம்மாவின் இறுதி சடங்குக்கு கூட அவர் கலந்து கொள்ள விரும்பவில்லையா? என்று பல விமர்சனங்கள் இருந்தது. ஆனால் இப்போது இறந்து போனது உடல்நிலை சரியில்லாத அக்கா என்று தகவல் வெளியாகி இருக்கிறது ஆனாலும் அவருடைய அக்காவின் இறுதி சடங்கில் கலந்து கொள்வதும் கலந்து கொள்ளாததும் அவருடைய சொந்த விருப்பம். அதை வைத்து பெரிய விமர்சனம் போய்க்கொண்டிருக்கிறது. அதற்கு மதிவாணன் என்ன பதில் சொல்லப் போகிறார் என்று எதிர்பார்ப்பு இருக்கிறது
